Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசை இந்திய வீரர்கள் ஆதிக்கம்.. புதிய உச்சம் தொட்ட அபிஷேக்.. டாப் 5 இடத்தில் 3 இந்தியர்கள்

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர் அபிசேக் சர்மா 135 ரன்கள் விளாசினார். இதில் 13 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் டி20 தரவரிசைக்கான பட்டியலில், அபிஷேக் ஷர்மா புதிய உச்சத்தை பெற்றிருக்கிறார்.

அபிஷேக் ஷர்மா 38 இடங்கள் முன்னேறி தற்போது டி20 பேட்ஸ்மன்களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 855 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கின்றார். இதேபோன்று மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும் ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் யாதவும் இருக்கிறார்கள்.

ind vs eng icc rankings abhishek sharma tilak varma

இதன் மூலம் முதல் ஐந்து இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்திருப்பது இந்திய அணியின் டாப் பேட்டிங் வரிசை எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அதேபோன்று ஜெய்ஸ்வால் தற்போது டி20 அணியில் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் மூன்று இடம் சரிந்து பன்னிரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

இதை போல் அபிஷேக் ஷர்மாவின் ஜோடியான சஞ்சு சாம்சனும், தற்போது ஐந்து இடங்கள் சார்ந்து 35வது இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஐசிசி t20 தரவரிசை பவுலருக்கான பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசீத் தன்னுடைய முதல் இடத்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆக்கில் உசேனிடம் இழந்தார். அதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று இடங்கள் முன்னேறி தற்போது பவுலர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் 705 ரேட்டிங்கை பிடித்திருக்கிறார்.

இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமாக செயல்பட்ட ரவி பிஷ்னாய், நான்கு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இதேபோன்று அக்சர் பட்டேல் ஒரு இடம் சரிந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான அக்சர் பட்டேல், இரண்டு இடங்கள் சரிந்து 13-வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஸ்மித் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இலங்கை வீரர் கமிண்டூ மெண்டிஸ் ஆறாவது இடத்திலும், டிராவிஸ் ஹெட் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஆறு இடங்கள் முன்னேறி 11 வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று டெஸ்ட் பௌலர்களுக்கான பட்டியலில் இலங்கைக்கு எதிராக ஏழு விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியா வீரர் லயன் ஆறாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

Story first published: Wednesday, February 5, 2025, 17:47 [IST]
Other articles published on Feb 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+