Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு... பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்

டெல்லி : சர்வதேச டி20 தொடரின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Recommended Video

ஐ.பி.எல் 2020ல் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் !

பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து இருந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி மாலன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல சமீபத்தில் இங்கிலாந்துடன் தோல்வியை தழுவினாலும் முந்தைய சாதனைகளை கொண்டு 275 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

ஐசிசி இன்று வெளியீடு

ஐசிசி இன்று வெளியீடு

சர்வதேச டி20 தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கியுள்ளார். அவருக்கு பதிலாக முதலிடத்தை இங்கிலாந்தின் டேவின் மாலன் பிடித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 129 ரன்களை அடித்ததன் மூலம் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

முதலிடத்தில் டேவிட் மாலன்

முதலிடத்தில் டேவிட் மாலன்

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா -இங்கிலாந்து இடையிலான டி20 தொடரில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் மாலன், 4 இடங்கள் முன்னேறி டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டி20 தரவரிசையில் 2வது இடத்தை பிடித்ததே இவரது முந்தைய சாதனையாக உள்ளது.

பார்ஸ்டோ, பட்லர் முன்னேற்றம்

பார்ஸ்டோ, பட்லர் முன்னேற்றம்

தொடர்ந்து முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் 8 இடங்கள் கீழே இறங்கியுள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள் ஜானி பார்ஸ்டோ மற்றும் ஜோஷ் பட்லர் ஆகியோரும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 72 ரன்களை அடித்து பார்ஸ்டோ 19வது இடத்தையும் பட்லர் 40வது இடத்திலிருந்து 28வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

க்ளென் மாக்ஸ்வெல் முன்னேற்றம்

க்ளென் மாக்ஸ்வெல் முன்னேற்றம்

இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆரன் பின்ச் 125 ரன்கள் எடுத்ததன்மூலம் 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். க்ளென் மாக்ஸ்வெல் பேட்ஸ்மேன்களில் 6வது இடத்தையும் ஆல்ரவுண்டரில் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இதில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து

இந்நிலையில் டி20 தரவரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியா தக்கவைத்துள்ளது. கடந்த மே மாதத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது. தற்போது ஆஸ்திரேலியா 275 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், சமீபத்திய டி20 தொடரை வெற்றி கொண்ட இங்கிலாந்து 271 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, September 9, 2020, 20:04 [IST]
Other articles published on Sep 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+