Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC T20 தரவரிசையில் இந்தியா சாதனை.. எந்த அணியும் தொட முடியாத உச்சத்தில் இந்திய அணி.. நம்பர் 1 இடம்!

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கையோடு, சர்வதேச டி20 தரவரிசையிலும் இந்திய அணி தனது பலத்தை நிரூபித்துள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள புதிய டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், புள்ளிகள் அடிப்படையில் மற்ற அணிகளால் தொட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

மார்ச் மாதம் நடந்த உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் அணி மற்றும் 3 முறை உலகக்கோப்பை வென்ற ஒரே அணி என்ற மாபெரும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப்படி, இந்திய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது.

ICC T20I Rankings India stands at number 1 position Following World Cup 2026 victory

தரவரிசையைக் கணக்கிடும் முறையில் 2025 மே மாதம் முதல் விளையாடிய போட்டிகளுக்கு 100 சதவீதமும், அதற்கு முந்தைய 2 வருடப் போட்டிகளுக்கு 50 சதவீதமும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டியுள்ளது. 262 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 258 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தரவரிசையில் முதல் 3 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.

முதல் 7 இடங்களைப் பொறுத்தவரை நியூசிலாந்து 247 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 244 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தான் 240 புள்ளிகளுடனும், வெஸ்ட் இண்டீஸ் 233 புள்ளிகளுடனும் உள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 8 மற்றும் 9-வது இடங்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச அணி ஒரு படி முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், இலங்கை அணி 6 புள்ளிகளை இழந்து 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் 10-வது இடத்தில் நீடிக்கிறது.

அமெரிக்க கிரிக்கெட் அணி இந்த முறை ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்து அமெரிக்கா அசத்தியுள்ளது. நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை அமெரிக்கா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதேபோல் நேபாளம் 17-வது இடத்திற்கும், ஓமன் 19-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன. கனடா அணி 20-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஐசிசி விதிமுறைப்படி கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 8 டி20 போட்டிகளில் விளையாடிய அணிகள் மட்டுமே தரவரிசையில் சேர்க்கப்படும். அந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யாத பிஜி, காம்பியா, கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய 4 நாடுகள் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச டி20 தரவரிசையில் உள்ள அணிகளின் எண்ணிக்கை 102-ல் இருந்து 98 ஆகக் குறைந்துள்ளது.

Story first published: Tuesday, May 5, 2026, 20:12 [IST]
Other articles published on May 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+