Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருனா எப்படின்னா போங்க... என் வேலைய நான் சரியாக பாக்கறேன் .. ராகுலின் தனி வழி!

டெல்லி : சர்வதேச டி20 போட்டிகளுக்கான சமீபத்திய ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் இந்திய வீரர் கே.எல். ராகுல் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதிய சர்வதேச டி20 தொடரில் அவரின் சிறப்பான ஆட்டங்களை தொடர்ந்து அவர் தனது நிலையை தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.

இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளநிலையில், இந்திய கேப்டன் விராட் கோலியும் 673 புள்ளிகளுடன் தொடர்ந்து 10வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளின் பட்டியல்

சர்வதேச டி20 போட்டிகளின் பட்டியல்

உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகள் மற்றும் வீரர்களின் ஆட்டங்களின் அடிப்படையில் ஐசிசியின் தரவரிசை பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சர்வதேச டி20 போட்டிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் கே.எல். ராகுல் தனது இரண்டாவது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அபாரமாக விளையாடிய ராகுல்

அபாரமாக விளையாடிய ராகுல்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரின் 5 போட்டிகளிலும் வென்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் கே.எல். ராகுல் சிறப்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேபோல அடுத்ததாக விளையாடப்பட்ட சர்வதேச ஒருநாள் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனநிலையில், அதிலும் சிறப்பான ஆட்டத்தை ராகுல் விளையாடினார்.

2வது இடத்தில் ராகுல்

2வது இடத்தில் ராகுல்

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டி20 போட்டிகளின் ஐசிசி தரவரிசைப்பட்டியலில் கே.எல். ராகுல் 823 புள்ளிகளுடன் தொடர்ந்து தனது 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்த பட்டியலில் 673 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி தனது 10வது இடத்தில் நீடித்து வருகிறார்.

வார்னர், ஸ்மித்தும் முன்னேற்றம்

வார்னர், ஸ்மித்தும் முன்னேற்றம்

இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 3 இன்னிங்ஸ்களில் அடித்த 2 அரைசதங்கள் உள்ளிட்ட 128 ரன்களால் 25வது இடத்திலிருந்து 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல தடைக்கு பிறகு 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 250 ரன்களை குவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் 25 இடங்கள் முன்னேறி 53வது இடத்தில் உள்ளார்.

ஹாட்ரிக் விக்கெட்டுகள்

ஹாட்ரிக் விக்கெட்டுகள்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் இடதுகை ஸ்பின்னர் ஆஷ்டன் அகர் 6 இடங்கள் முன்னேற்றமடைந்து பௌலர்களுக்கான பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இவர் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்ளிட்ட 8 விக்கெட்டுகள் இவரது இடத்தை முன்னேற்றியுள்ளது.

Story first published: Friday, February 28, 2020, 14:21 [IST]
Other articles published on Feb 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+