Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி தரவரிசையில் 18 இடங்கள் எகிறிய ஸ்ரேயாஸ் ஐயர்.. டாப் 10-ல் 4 இந்திய வீரர்கள் ஆதிக்கம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 பேட்டிங் தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 இடங்கள் முன்னேறி முதல்முறையாக டாப் 10 இடத்திற்குள் நுழைந்து புதிய சாதனை படைத்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 42 பந்துகளில் அதிரடி சதம் விளாசினார். இந்த வரலாற்று ஆட்டத்தின் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர், ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 7-வது இடத்தைப் பிடித்து தனது வாழ்நாளின் சிறந்த தரவரிசையை எட்டியுள்ளார்.

இதன் மூலம் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையின் முதல் 10 இடங்களில் 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிரடி வீரர் இஷான் கிஷன் தொடர்ந்து உலகின் நம்பர் 1 பேட்டராக நீடிக்கிறார். அபிஷேக் சர்மா 2-வது இடத்திலும், திலக் வர்மா 10-வது இடத்திலும் உள்ளனர்.

ICC T20I Rankings Shreyas Iyer Climbs 18 Spots To Enter Top 10 In Latest ICC T20I Rankings

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் அப்ரார் அகமதுவை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌சர் படேல் 16 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி தரவரிசை

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 223 ரன்கள் குவித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் 841 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 பேட்டராக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறார்.

அதேபோல் கே.எல்.ராகுல் 7 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்து டாப் 10-க்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 162 ரன்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசிரமம் செல்ல 5 கோடி ரூபாய் வாங்கினாரா விராட் கோலி? குற்றச்சாட்டுக்கு அதிகாரப்பூர்வ மறுப்பு!

ஆசிரமம் செல்ல 5 கோடி ரூபாய் வாங்கினாரா விராட் கோலி? குற்றச்சாட்டுக்கு அதிகாரப்பூர்வ மறுப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 - 1 என வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு போட்டிகளில் எளிதாக வென்ற இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 351 ரன்கள் குவித்தும் மோசமான பந்துவீச்சால் சொதப்பி தோல்வி அடைந்தது.

Story first published: Wednesday, October 7, 2026, 16:20 [IST]
Other articles published on Oct 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+