For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC டி20 தரவரிசை: இசான் கிஷன், சிவம் துபேவுக்கு கவுரவம்.. முதலிடத்தை தக்க வைத்தாரா அபிஷேக்?

மும்பை: ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளார். இந்த தரவரிசையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 17 இடங்கள் உயர்ந்து எட்டாம் இடத்தைப் பிடித்து, 732 புள்ளிகளை பெற்றுள்ளார். 2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக 24 பந்துகளில் 61 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 40 பந்துகளில் 77 ரன்களும் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.

இந்த தரவரிசையில், இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அபிஷேக் ஷர்மா தொடர்ந்து 2 டக் அவுட்டான நிலையிலும், தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இலங்கையின் பதும் நிஸ்ஸங்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து, மூன்று இடங்கள் உயர்ந்து மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏய்டன் மார்க்ரம் ஆறு இடங்கள் உயர்ந்து 15வது இடத்தை பிடித்துள்ளார். ரியான் ரிகெல்டன் 22 இடங்கள் உயர்ந்து 11வது இடமும், இங்கிலாந்தின் ஜேக்கப் பெதர்ல் 22 இடங்கள் உயர்ந்து 32வது இடத்தையும் இந்த பட்டியலில் முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

ஐசிசி டி20 அனைத்துத் துறை வீரர்கள் தரவரிசையில், இந்திய ஹர்திக் பாண்டியா தனது மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். ஷிவம் தூபே மூன்று இடங்கள் உயர்ந்து ஒன்பதாவது இடத்துடன் முதல் பத்து இடங்களுக்குள் வந்தார். பாகிஸ்தானின் சயூம் அயூப், ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராஜாவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி மற்றும் ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆகியோர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தனர்.

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஐந்து இடங்கள் பின்தங்கி 16வது இடத்தைப் பிடித்தார். அதேசமயம், அக்சர் படேல் நான்கு இடங்கள் முன்னேறி 14வது இடத்தையும், ஜஸ்பிரித் பும்ரா ஆறு இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும் எட்டினர்.

பேட்ஸ்மேன்களில் அபிஷேக் ஷர்மாவைப் போலவே, பந்துவீச்சாளர்களில் வருண் சக்ரவர்த்தி தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி, சக்ரவர்த்தியை விட 56 புள்ளிகள் குறைவாக 740 புள்ளிகளுடன் உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து, ஜிம்பாப்வேயின் பிராட் எவான்ஸ் 10 இடங்கள் முன்னேறி முதல் பத்து இடங்களுக்குள் வந்தார். இலங்கையின் மஹீஷ் தீக்‌ஷனா 13வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 8வது இடத்தையும், நாதன் எல்லிஸ் 11வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால், ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அகீல் ஹுசைன் தலா மூன்று இடங்கள் பின்தங்கி முறையே 12வது மற்றும் 18வது இடங்களில் உள்ளனர்.

Story first published: Wednesday, February 18, 2026, 16:04 [IST]
Other articles published on Feb 18, 2026
English summary
The latest ICC T20I rankings record notable movements across batters, bowlers, and all-rounders, led by Ishan Kishan's rise and Tilak Varma's ascent, reflecting recent performances and key fixtures worldwide.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+