For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதில் சிக்கல்.. ஐ.சி.சி.க்குள் அரசியல்..20 கோடி ஒதுக்கீடு!!

துபாய்: ஒலிம்பிக் தொடரில் உலகின் பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. நம் இந்தியர்கள் கேள்வி படாத விளையாட்டு எல்லாம் இருக்கும்

ஆனால் உலகில் அதிக மக்களால் பார்க்க கூடிய 2வது விளையாட்டு என்ற பெருமையை பெற்றுள்ள கிரிக்கெட், 100 ஆண்டுகளுக்கு மேல் ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை.

இதற்கு 5 நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பது முடியாத காரியம் என்று கூறப்பட்டது

ஐ.சி.சி. ஏற்பாடு

ஐ.சி.சி. ஏற்பாடு

ஒருநாள் போட்டி அறிமுகமான பிறகு, ஒரு போட்டியின் முடிவிற்கு ஒருநாள் முழுவதும் காத்திருக்கனுமா வாய்ப்பு இல்லை என்று பரீசிலிக்கப்படவில்லை. ஆனால், டி20 போட்டிக்கு பிறகு கிரிக்கெட் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் பரவியது. போட்டியின் முடிவு 3 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்பதால், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்தது.

பி.சி.சி.ஐ. முட்டுக்கட்டை

பி.சி.சி.ஐ. முட்டுக்கட்டை

ஆனால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்தால், தனியார் அமைப்பான பி.சி.சி.ஐ., மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்ற ஒரே காரணத்திற்காக ஐ.சி.சி.யின் முடிவிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒலிம்பிக்கில் இடம்பெறுவது முக்கியம் என்றும், இதற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று பலமுறை ஐ.சி.சி. நிர்வாகிகள் வலியுறுத்திய பின் பி.சி.சி.ஐ. ஒப்புதல் அளித்தது.

பணியில் தொய்வு

பணியில் தொய்வு

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முயற்சி செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழு இதுவரை ஒரு முறை தான் ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த குழுவின் தலைவராக இருந்த வாட்மோர், ஒலிம்பிக் சம்மேளன் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவரும் தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

வாய்ப்பு குறைவு

வாய்ப்பு குறைவு

இதனையடுத்து ஐ.சி.சி.யின் தலைவர் பார்கிலே, ஒலிம்பிக் செயல் திட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ளார். வாட்மோர் தனது பணியை சிறப்பாக செய்ததாகவும், 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்றால் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று கிரேக் பார்கிலே கூறினார். இதற்காக 20 கோடி ரூபாயை ஐ.சி.சி. ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த நிலையில், 2028 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டிய விளையாட்டின் உத்தேச பட்டியலை ஐ.ஓ.சி. வெளியிட்டது. அதில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இதனால் கிரிக்கெட் 2028 ஒலிம்பிக்கில் இடம்பெறுவதும் கேள்விக்குறியே.

Story first published: Thursday, December 23, 2021, 21:33 [IST]
Other articles published on Dec 23, 2021
English summary
ICC Takes steps to Make cricket in 2028 olympics2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்றால் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+