Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு இரண்டாவது இடம்... இந்தியாவுக்கு 3வது இடம்... எதுல முந்தியிருக்காரு கோலி!

டெல்லி : ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான இறுதிப்பட்டியல் இது என்று கூறப்படுகிறது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சத்தீஸ்வர் புஜாரா மற்றும் ரஹானே இருவரும் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளனர்.

2வது இடத்தில் விராட் கோலி

2வது இடத்தில் விராட் கோலி

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான இறுதிப் பட்டியல் இது என்று கூறப்படும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 886 புள்ளிகளுடன் ஒரு இடம் மேலேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

3வது இடத்தில் வில்லியம்சன்

3வது இடத்தில் வில்லியம்சன்

முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடாத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். இவரை லாபுசாக்னே 827 புள்ளிகளுடனும் பாபர் அசாம் 797 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் தொடர்கின்றனர்.

புஜாரா, ரஹானே இடம்பிடிப்பு

புஜாரா, ரஹானே இடம்பிடிப்பு

இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் சத்தீஸ்வர் புஜாரா 7வது இடத்தில் 766 புள்ளிகளுடனும் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே 726 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையிலும் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.

பும்ரா, அஸ்வின் இடம்பிடிப்பு

பும்ரா, அஸ்வின் இடம்பிடிப்பு

இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையின் பௌலர்கள் பட்டியலில் 8வது மற்றும் 10வது இடங்களில் இந்திய வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ரா 779 புள்ளிகளுடனும், ரவிசந்திரன் அஸ்வின் 756 புள்ளிகளுடனும் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.

இடம்பெற்ற ஜடேஜா, அஸ்வின்

இடம்பெற்ற ஜடேஜா, அஸ்வின்

இதேபோல ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜடேஜா 3வது இடத்தையும் அஸ்வின் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து முன்னேற்றம்

நியூசிலாந்து முன்னேற்றம்

இந்நிலையில் இந்த பட்டியலில் 2வது இடத்திலிருந்து ஒரு இடம் கீழே இந்திய அணி இறங்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் நியூசிலாந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை கெட்டியாக பிடித்துள்ளது.

Story first published: Tuesday, December 15, 2020, 19:33 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+