Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் நம்பர் 1 ரேங்கை காலி செய்த அஸ்வின்.. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் யாருக்கு?

மும்பை : சர்வதேச டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தில் இருந்த நிலையில், அவரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் அஸ்வின்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 26 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் 9 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 870 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.

ICC Test Bowling ranking Ravichandran Ashwin beat Bumrah to become number 1 bowler

முன்னதாக இதே இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முடிவில் பும்ரா டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து இருந்தார். அவரை சக அணி வீரரான அஸ்வின் பின்தள்ளி இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 4 போட்டிகளில் மட்டுமே ஆடி 19 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பும்ரா 847 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதே பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 751 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 740 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை - (மார்ச் 13 அன்று வெளியிடப்பட்ட பட்டியல்)

1. அஸ்வின் - 870 ரேட்டிங் புள்ளிகள்
2. ஜோஷ் ஹேசல்வுட் - 847
2. ஜஸ்பிரிட் பும்ரா - 847
4. ககிசோ ரபாடா - 834 புள்ளிகள்
5. பாட் கம்மின்ஸ் - 820 புள்ளிகள்
6. நாதன் லியோன் - 801 புள்ளிகள்
7. ரவீந்திர ஜடேஜா 878 புள்ளிகள்
8. பிரபாத் ஜெயசூர்யா - 783 புள்ளிகள்
9. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 739 புள்ளிகள்
10. ஷஹீன் அப்ரிடி - 733 புள்ளிகள்

Story first published: Wednesday, March 13, 2024, 17:46 [IST]
Other articles published on Mar 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+