
இந்தியா தோல்வி
இந்த நிலையில், 2021-23ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான நியூசிலாந்தை வங்கதேச அணி வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதே போன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை வென்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் தோல்வியை தழுவியது.

புள்ளி பட்டியல்
இதனால், ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இலங்கை அணி 2வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி 3வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவுடன் தோற்ற இந்திய அணி 55,2 சதவீத புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது

சரிந்த நியூசிலாந்து
ஜோஹன்ஸ்பர்க் டெஸ்டை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 50 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. வரலாற்று வெற்றியை பெற்ற வங்கதேச அணி 33.3 சதவீத புள்ளியுடன் 6வது இடத்திலும், 25 சதவீத புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் 7வது இடத்திலும் உள்ளது. நடப்பு உலக சாம்பியனான நியூசிலாந்து அணி 8வது இடத்தில் உள்ளது. ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Recommended Video

முக்கியத்துவம்
இந்திய அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி, 2 போட்டியில் தோல்வி, 2 போட்டிகள் டிரா செய்துள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்தியாவின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அஸதிரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும் நடைபெறும் தொடர் இந்தியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











