Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இறுதி போட்டியில் ஒரு காலடி வைத்த இந்தியா.. ஆஸி.க்கு இப்போது ஆபத்து

டெல்லி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெரும் வாய்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் தொடரை தற்போது இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று முன்னிலையில் இருக்கிறது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலிய அணி 66.7 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.

வெளியேறிய தென்னாப்பிரிக்கா

வெளியேறிய தென்னாப்பிரிக்கா

இந்திய அணி டெல்லி டெஸ்டில் வென்றதன் மூலம் 64.6 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இலங்கை அணி 53 சதவீதத்துடன் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா டெல்லி டெஸ்டில் பெற்ற வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது. ஒருவேளை எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றால் கூட தென்னாப்பிரிக்கா பெறும் புள்ளிகளை விட இந்தியா குறைவாக பெறாது.

இந்தியாவின் வாய்ப்பு

இந்தியாவின் வாய்ப்பு

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரை தென்னாபிரிக்க அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றினாலும் அவர்களால் இந்தியா வின் புள்ளிகளை எட்ட முடியாது. இதன் காரணமாக தற்போது இந்தியா இலங்கை ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் இடையே மட்டும்தான் போட்டி நிலவுகிறது. இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றால் கூட இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

ஆஸி.க்கு ஆபத்து

ஆஸி.க்கு ஆபத்து

ஆஸ்திரேலிய அணி ஏறக்குறைய இறுதி போட்டியில் இருந்தால் கூட இந்தியாவிடம் தொடரை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்று, அதே சமயம் இலங்கை அணி நியூசிலாந்தை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றால் ஆஸ்திரேலிய அணி வெளியேறிவிடும். இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு சென்று விடும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது.

ஒருவேளை இந்திய அணி கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியா இலங்கை மோதுமா?

இந்தியா இலங்கை மோதுமா?

இலங்கை அணி நியூசிலாந்திடம் இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் அப்போதும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இறுதிச்சுற்றுக்கு செல்லும். இறுதித் தொடர் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதை விட இலங்கையை எதிர்கொள்வது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா நான்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை அடைந்து, இலங்கை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்தை ஜெயிக்க வேண்டும் என கணக்கு போட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, February 19, 2023, 17:58 [IST]
Other articles published on Feb 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+