Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்.. இந்தியா அபாரம்.. அடி வாங்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

மும்பை : 2023 25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக சமனில் முடிவடைந்தது.

இதனால் இந்திய அணியின் புள்ளிகள் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது.ஆனால் ஆசஸ் தொடரிலும் நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் இரு அணிகளுமே வெற்றி தோல்வி என்று சமனில் முடியும் வகையில் மாறியது.

ICC Test championship points table 2023 - Big loss for England and australia

மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதேபோன்று ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்து வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு 19 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அணிக்கு 10 புள்ளிகளும் குறைக்கப்பட்டிருக்கிறது.இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

இதன் மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 100% புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும் 66.7 சதவீதத்துடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 30 சதவீத புள்ளிகள் உடன் ஆஸ்திரேலியா அணி மூன்றாம் இடத்திலும், 16.67 சதவீதிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது இடத்திலும், 15 சதவீதம் புள்ளிகள் உடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

எனினும் இது மிகவும் ஆரம்பமான சூழ்நிலையாக இருந்தாலும் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவும் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த புள்ளி பட்டியல் பல்வேறு மாற்றங்களை சந்திக்கும். ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் இதே போல் முதல் இரண்டு இடங்களில் இருந்தால் அவர்கள் பைனலில் சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 2, 2023, 17:10 [IST]
Other articles published on Aug 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+