For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல என்ன வழி? இன்னும் எத்தனை வெற்றி தேவை ?

நாக்பூர் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. டாப் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு செல்ல முடியும்.

ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்தாலும் அந்த அணிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை. அப்படி பார்டர் கவாஸ்கர் தொடரில் அந்த அணி முழுமையாக தோற்றாலும் கூட மற்ற அணிகளால் பெரிய ஆபத்து இல்லை.

ஆனால் இந்திய அணி இந்தத் தொடரை கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவின் வாய்ப்பு

இந்தியாவின் வாய்ப்பு

இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரா என்பது மிகவும் சிறப்பான அம்சமாகும். அதாவது நான் தோல்வியும் அடையவில்லை வெற்றியும் பெறவில்லை என்ற வசதி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் டிரா கூட நமது வாய்ப்பை பறித்து விடும். இதனால் அடைந்தால் வெற்றி என்ற ஒரே குறிக்கோளுடன் இந்திய அணி விளையாடி வருகிறது .

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

தற்போது முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தற்போது எத்தனை புள்ளிகளை பெற்றிருக்கிறது என்று பார்ப்போம். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி 58.93 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போது முதல் டெஸ்ட் வென்றதை அடுத்து இந்தியாவின் புள்ளி 61.67 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு 75. 56 என்ற அளவில் இருந்தது .

சரிந்த புள்ளி

சரிந்த புள்ளி

தற்போது தோல்வியை தழுவியதால் அது 70 புள்ளி 83 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் குறைந்தபட்சம் இரண்டு ஆட்டத்தில் ஆவது வெற்றி பெற வேண்டும். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இலங்கை அணி 53 சதவீதத்துடன் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 48.72 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாடுகிறது.

தென்னாப்பிரிக்கா தொடர்

தென்னாப்பிரிக்கா தொடர்

இதில் இரண்டுலுமே தென்னாப்பிரிக்கா தோற்றுவிட்டால் நாம் ஆஸ்திரேலிய தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று வென்றாலே போதுமானது. ஆனால் பார்டர் கவாஸ்கர் கோப்பை முடிந்த பிறகு தான் அந்த தொடர் தொடங்குகிறது. இதனால் மற்றவர்களின் உதவியை நாடாமல் இந்திய அணி சொந்த காலிலே இறுதிப் போட்டிக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.தற்போது அடுத்த டெஸ்ட் போட்டி டெல்லி பிரோசா கோட்லா வாயில் அடிங்க..வாயில் அடிங்க.. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

36 ஆண்டுகள்

36 ஆண்டுகள்

இதில் இந்திய அணி 36 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது இல்லை. ஆனால் நாம் முன்பே சொன்னது போல் ட்ரா கூட இந்தியாவின் இறுதிப் போட்டி கனவை பறித்து விடும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் மாதம் ஏழாம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த முறை இந்திய அணி நியூசிலாந்திடம் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் இம்முறை எப்படியாவது கோப்பையை வென்று 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பைக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்க இந்திய அணி போராடும்.

Story first published: Saturday, February 11, 2023, 21:23 [IST]
Other articles published on Feb 11, 2023
English summary
ICC Test championship points table changed after india win vs australia உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்ல என்ன வழி? இன்னும் எத்தனை வெற்றி தேவை ?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+