Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் தரவரிசையில் கெத்து காட்டும் புஜாரா.. அஸ்வினும், பும்ராவும் அசத்தல்.. அப்ப கோலி?

துபாய் : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் புஜாரா, அஸ்வின், பும்ரா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றியில் புஜாரா பெரும் பங்கு வகித்தார். பந்துவீச்சு கூட்டணியும் வெற்றிக்கு முக்கிய காரணம். அதே சமயம், இந்த போட்டியில் கோலி சரியாக ரன் குவிக்கவில்லை.

புஜாரா நான்காம் இடம்

புஜாரா நான்காம் இடம்

இதையடுத்து, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் சிலர் முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்களில் அடிலெய்டு டெஸ்டில் சதம் மற்றும் அரைசதம் அடித்த புஜாரா அதிரடியாக நான்காம் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் மற்றும் தடையில் இருக்கும் டேவிட் வார்னர் ஆகியோரை முந்தினார் புஜாரா.

பும்ரா வேகமாக முன்னேற்றம்

பும்ரா வேகமாக முன்னேற்றம்

முதல் டெஸ்டில் ஆறு விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா, பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 33வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு தான் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். குறைந்த இடைவெளியில் பும்ரா வேகமாக முன்னேறி வருகிறார். இந்த 33வது இடமே பும்ராவின் சிறந்த டெஸ்ட் தரவரிசை ஆகும்.

அசத்தல் அஸ்வின்

அசத்தல் அஸ்வின்

அஸ்வின், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ்-ஐ முந்தி ஆறாம் இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய முதல் டெஸ்டில் வாய்ப்பு பெறாத ஜடேஜா ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். ஷமி, இஷாந்த் சர்மா இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.

கோலி முதல் இடம்

கோலி முதல் இடம்

கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 மற்றும் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனினும், முந்தைய ரன் குவிப்பை வைத்து 920 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். கேன் வில்லியம்சனிடம் தன் முதல் இடத்தை பறி கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. கேன் வில்லியம்சன் தற்போது 913 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, December 12, 2018, 12:34 [IST]
Other articles published on Dec 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+