Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் தரவரிசை - நம்பர் 1 இடத்தை தட்டிப் பறித்த ஆஸ்திரேலியா.. இந்தியா எந்த இடம்?

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்ட டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதே போல முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

ICC Test Ranking - Australia become number 1 team, India got second rank

இந்த இரண்டு அணிகளும் தாங்கள் ஆடும் தொடரில் அதிக வெற்றிகளை பெற்றால் முதல் இடத்தை தக்க வைக்கலாம் அல்லது பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வி அடைந்து, ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.

இதன் முடிவில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 118 புள்ளிகள் பெற்று டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தை பெற்றது. ஆஸ்திரேலியா அணி மூன்றாவது டெஸ்ட்டில் ஆட இருப்பதால் அதிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைக்க வாய்ப்பு உள்ளது.

ICC Test Ranking - Australia become number 1 team, India got second rank

ஐசிசி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் இடம் பெற்றுள்ள 12 அணிகளின் பட்டியல் -

ஆஸ்திரேலியா - 118 புள்ளிகள்

இந்தியா - 117 புள்ளிகள்

இங்கிலாந்து - 115 புள்ளிகள்

தென்னாப்பிரிக்கா - 106 புள்ளிகள்

நியூசிலாந்து - 95 புள்ளிகள்

பாகிஸ்தான் - 92 புள்ளிகள்

இலங்கை - 79 புள்ளிகள்

வெஸ்ட் இண்டீஸ் - 77 புள்ளிகள்

வங்கதேசம் - 51 புள்ளிகள்

ஜிம்பாப்வே - 32 புள்ளிகள்

ஆப்கானிஸ்தான் - 10 புள்ளிகள்

அயர்லாந்து - 0 புள்ளி

Story first published: Friday, January 5, 2024, 18:59 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+