ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. தென்னாப்பிரிக்காவால் இந்தியாவுக்கு விழுந்த அடி.. 2வது ரேங்கும் போச்சு
சிட்னி: சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1 - 3 என இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு சரிந்து உள்ளது. அதற்கு காரணம், தென்னாப்பிரிக்கா அணி தான்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்த போதும் இந்தியா அணி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் தான் இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வென்று இருந்தது.

இதை அடுத்து கூடுதல் ரேட்டிங் பெற்றி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 4531 புள்ளிகளை பெற்று 126 என்ற ரேட்டிங் உடன் முதல் இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா 3,355 புள்ளிகளை பெற்ற 112 ரேட்டிங் உடன் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. இந்திய அணி 4248 புள்ளிகளை பெற்று 109 ரேட்டிங் உடன் மூன்றாவது இடத்திற்கு சரிந்து உள்ளது. இந்திய அணி இந்த சரிவில் இருந்து மீள்வதற்கு பல மாதங்கள் ஆகும். இனி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் அதன் பின் உள்ள டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளை பெற்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தர வரிசையில் இரண்டாவது இடத்தை பெற முடியும்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 106 ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 96 ரேட்டிங் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 87 என்ற ரேட்டிங் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 83 ரேட்டிங் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 75 ரேட்டிங் உடன் எட்டாவது இடத்திலும், வங்கதேசம் 65 ரேட்டிங் உடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. அயர்லாந்து 26 ரேட்டிங் பெற்று பத்தாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications