Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெ.இண்டீஸ் கிட்ட இந்தியா சொதப்பாம இருக்கணும்.. இல்லைனா ஆஸ்திரேலியா ஆப்பு வச்சுரும்

துபாய் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அக்டோபர் 4 முதல் நடைபெற உள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட சிறிய டெஸ்ட் தொடர் தான், அதிலும், இந்தியாவில் தான் தொடர் நடக்கிறது என எல்லாம் இருந்தாலும் இந்தியா சொதப்பினால், டெஸ்ட் போட்டிகளில் முதல் அணி என்ற முக்கிய பெருமையை இழக்க நேரிடும்.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையே நடக்க உள்ள டெஸ்ட் தொடர் தான் அதற்கு காரணம். இந்த இரு அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளன.

இந்தியா 115 புள்ளிகள்

இந்தியா 115 புள்ளிகள்

இந்தியா தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி 115 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அடுத்த இரண்டு இடங்களில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா 106 புள்ளிகளுடன் இருக்கின்றன. ஆஸ்திரேலியா தசம வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இந்தியாவுக்கு ஆபத்து

இந்தியாவுக்கு ஆபத்து

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 2-0 என தொடரை இழந்தால் 7 புள்ளிகள் இழந்து 108க்கு வந்துவிடும். அதே சமயம், ஆஸ்திரேலியா 2-0 என பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்தினால் 1௦9 புள்ளிகள் பெறும். எனவே, இந்தியா டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு

பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு

பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால் இலங்கையை முந்தி டெஸ்ட் தரவரிசையில் ஆறாம் இடம் பிடிக்கும். ஆஸ்திரேலியா 1-0 என தொடரை வென்றால் கூட 107 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துவிடும்.

வென்றால் குறைவு, தோற்றால் அதிகம்

வென்றால் குறைவு, தோற்றால் அதிகம்

இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால் வெறும் ஒரு புள்ளி மட்டுமே கிடைக்கும். இதற்கு காரணம், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது. அதே சமயம், இந்த அணியிடம் தோற்றால் அதிக புள்ளிகளை இழக்க நேரிடும்.

Story first published: Wednesday, October 3, 2018, 19:28 [IST]
Other articles published on Oct 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+