Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் ரேங்கிங் - உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனான இங்கிலாந்து ஜாம்பவான்.. விராட் கோலி எந்த இடம்?

லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் இருந்தார்.

அவரை பின் தள்ளி இருக்கும் ஜோ ரூட், தற்போது முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரை இங்கிலாந்து 3 - 0 என எளிதாக கைப்பற்றியது.

Joe Root Virat Kohli Test cricket

அந்தத் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் நான்கு இன்னிங்ஸ்களில் 291 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இரண்டாவது போட்டியில் அவர் 122 ரன்கள் எடுத்தார். அது அவரது 32 வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். இதன் மூலம் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், அவர் இந்த தொடரில் ஆடிய போது 12,000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார். அதன் மூலம், தற்போது டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் 12,000 ரன்களை கடந்திருக்கும் ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் செய்தார். மேலும், இதுவரை டெஸ்ட் வரலாற்றில் 12,000 ரன்களை கடந்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

இந்த சிறப்பான செயல்பாடுகளை அடுத்து டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 872 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். கேன் வில்லியம்சன் 259 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி பத்தாவது இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா ஆறாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் :

ஜோ ரூட் (872 புள்ளிகள்), கேன் வில்லியம்சன் (859), பாபர் ஆசம் (768), டேரில் மிட்செல் (768), ஸ்டீவ் ஸ்மித் (757).

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர்கள்:

ரவிச்சந்திரன் அஸ்வின் (870 புள்ளிகள்), ஜோஷ் ஹேசில்வுட் (847), ஜஸ்பிரித் பும்ரா (847), ககிசோ ரபாடா (834), பாட் கம்மின்ஸ் (820).

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 5 இடத்தில் இருக்கும் ஆல் ரவுண்டர்கள்:

ரவீந்திர ஜடேஜா (444), ரவிச்சந்திரன் அஸ்வின் (322), ஷகிப் அல் ஹசன் (310), ஜோ ரூட் (284), அக்சர் படேல் (269).

Story first published: Wednesday, July 31, 2024, 17:11 [IST]
Other articles published on Jul 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+