Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் ரேங்கிங்கில் நியூசி. வீரருக்கு பெப்பே காட்டும் கோலி.. பெரிய முன்னேற்றம் கண்ட பும்ரா

துபாய் : கோலி சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் தன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்திய வீரர்கள் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோரும் தங்கள் இடங்களை முன்னேற்றிக் கொண்டுள்ளனர்.

இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும், கோலி சதம் அடித்தார். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்.

கோலி தொடர்ந்து முதலிடம்

கோலி தொடர்ந்து முதலிடம்

பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் கோலி அதிரடியாக 14 புள்ளிகள் உயர்ந்து 934 தரவரிசைப் புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். இரண்டாம் இடத்தில் கோலியை துரத்தி வரும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை விட கோலி 19 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார்.

பண்ட், ரஹானே முன்னேற்றம்

பண்ட், ரஹானே முன்னேற்றம்

ரிஷப் பண்ட் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடிக்காவிட்டாலும் இரண்டு இன்னிங்க்ஸிலும் ஓரளவு ரன் சேர்த்தார். அதனால், 11 இடங்கள் முன்னேறி 48வது இடத்தை பிடித்துள்ளார். ரஹானே டெஸ்ட் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

ஷமி, பும்ரா அசத்தல்

ஷமி, பும்ரா அசத்தல்

இரண்டாம் டெஸ்டில் எட்டு விக்கெட்கள் வீழ்த்திய ஷமி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 24வது இடத்தையும், பும்ரா 28வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் பும்ரா தன் சிறந்த தரவரிசை இடத்தை பெற்றுள்ளார்.

பும்ரா அதிரடி முன்னேற்றம்

பும்ரா அதிரடி முன்னேற்றம்

பும்ரா இந்த ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். ஆண்டு இறுதிக்குள் 28வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் மற்றும் ஜடேஜா முதல் பத்து இடங்களுக்குள் தொடர்கின்றனர்.

ஆஸி.வீரர்கள் முன்னேற்றம்

ஆஸி.வீரர்கள் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் சிறப்பாக பந்துவீசினார். அவர் தரவரிசையில் ஏழாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் உஸ்மான் கவாஜா 12ஆம் இடமும், டிம் பெய்ன் 46வது இடமும். ட்ராவிஸ் ஹெட் 63வது இடமும் பெற்றுள்ளனர்.

Story first published: Thursday, December 20, 2018, 15:23 [IST]
Other articles published on Dec 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+