Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெல்போர்ன்ல அடிச்ச அடிக்கு பரிசு... ஐசிசி தரவரிசையில 5 இடங்கள் முன்னேறியிருக்காரு கேப்டன்

மெல்போர்ன் : மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 112 மற்றும் அவுட்டாகாமல் 27 ரன்களை அடித்தார்.

இந்த போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி கொண்டுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்தியாவின் செயல்பாடுகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் எதிரொலித்துள்ளது.

விராட் கோலி 2வது இடத்திலேயே நீடித்துள்ள நிலையில், ரஹானே 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு தாவியுள்ளார்.

சிறப்பான ரஹானே ஆட்டம்

சிறப்பான ரஹானே ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடந்து முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியில் அஜிங்க்யா ரஹானே சிறப்பான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தியதுடன் மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் முதன் இன்னிங்சில் 112 ரன்களையும் இரண்டாவது போட்டியில் அவுட் ஆகாமல் 27 ரன்களையும் எடுத்துள்ளார்.

ஆண்டின் இறுதி பட்டியல்

ஆண்டின் இறுதி பட்டியல்

இந்நிலையில் தற்போது ஆண்டின் இறுதி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் எதிரொலித்துள்ளன. இந்த போட்டியில் பங்கேற்காத விராட் கோலி தன்னுடைய 2வது இடத்திலேயே நீடிக்கிறார். `

6வது இடத்தை பிடித்த ரஹானே

6வது இடத்தை பிடித்த ரஹானே

மாறாக அஜிங்க்யா ரஹானே 5 இடங்கள் தாவி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதேபோல இந்த போட்டியின் மூலம் தன்னுடைய சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சுப்மன் கில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள இடம் 76.

77வது இடத்தில் சிராஜ்

77வது இடத்தில் சிராஜ்

இந்த போட்டியில் முதல் முறையாக விளையாக விளையாடிய முகமது சிராட் பௌலர்கள் டெஸ்ட் தரவரிசையில் 77வது இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவி அஸ்வின் தனது 9வது இடத்திலிருந்து 2 இடங்கள் தாவி 7வது இடத்தை பிடித்துள்ளார்.

புள்ளிகளில் முன்னேற்றம்

புள்ளிகளில் முன்னேற்றம்

இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 57 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய 3வது இடத்திலேயே தொடர்கிறார். ஆயினும் புள்ளிகளில் அவர் முன்னேறியுள்ளார். புஜாரா இரண்டு இடங்கள் கீழிறங்கியுள்ளார்.

Story first published: Thursday, December 31, 2020, 16:46 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+