நல்ல சான்ஸ்தான்.. ஆனா ரொம்ப கஷ்டமாச்சே பாஸ்..!
பெங்களூரு: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணிக்கு ஐசிசி தரவரிசையில் 2வது இடத்திற்கு முன்னேற ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 5ம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது.
இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் தொடருக்கு காந்தி - மண்டேலா ஃப்ரீடம் கோப்பை என்று பெயரிடப்பட்டுள்ளது.

5வது இடத்தில்
தற்போது டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா நம்பர் ஒன் அணியாக உள்ளது.

வெள்ளை அடித்தால்
4 போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்காவை வெள்ளை அடித்தால் இந்தியா, தரவரிசையில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

அவங்க ஜெயிச்சுட்டா
மாறாக தென் ஆப்பிரிக்கா நான்கு போட்டிகளிலும் வென்று விட்டால் நாம் 96 புள்ளிகளுடன் கேவலமான நிலைக்குத் தள்ளப்படுவோம். தென் ஆப்பிரிக்கா 130 புள்ளிகளுகளுடன் வலுவான நிலைக்கு உயர்ந்து விடும்.

யார் யார் எந்தெந்த இடத்தில்
தற்போது தென் ஆப்பிரிக்கா 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும், 3வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன. 4வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

5வது இடத்தில் இந்தியா
இந்தியா 5வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 6, இலங்கை 7, மேற்கு இந்தியத் தீவுகள் 8, வங்கதேசம் 9, ஜிம்பாப்வே 10 என உள்ளன.


Click it and Unblock the Notifications