மழையால் சறுக்கிய இந்தியா.. ஐசிசி ரேங்க்கில் அந்தோ பரிதாபம்!
துபாய்: இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து இந்தியா அணி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா 130 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்தும் 99 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் கொண்ட போட்டியில் இந்தியா ஆடியது.

இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து இடையூறு செய்த மழை காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால், இந்தியா 97 புள்ளிகளுடன், 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
4-வது இடத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானும் 97 புள்ளிகளுடன் இந்தியாவுடன் இருக்கையை பகிர்ந்து கொண்டுள்ளன.
Story first published: Monday, June 15, 2015, 10:00 [IST]
Other articles published on Jun 15, 2015


Click it and Unblock the Notifications