Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தப் பக்கம் அதிமுக "வின்".. அந்தப் பக்கம் அஸ்வின்தான் நம்பர் 1!

டெல்லி: ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியாவின் ஆர். அஸ்வின் பந்து வீச்சாளர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 895 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சிறப்பாக விளையாடி வருவதால் அவரது முதலிடமும் அவரிடமே நீடிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி 8 விக்கெட்களைச் சாய்த்தது நினைவிருiக்கலாம்.

விசாகப்பட்டனத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற அஸ்வினே முக்கியக் காரணம். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 1-0 என்ற கணக்கில முன்னிலை பெற்றுள்ளது.

2வது இடத்தில் ஹெராத்

2வது இடத்தில் ஹெராத்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெராத் 2வது இடத்தில் இருக்கிறார். அவர் 867 புள்ளிகளுடன் உள்ளனர்.

6வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா

6வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா

6வது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அவர 795 புள்ளிகளுடன் இருக்கிறார். டாப் 10 இடங்களில் அஸ்வினும், ஜடேஜாவும் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது இடம் ஸ்டெயினுக்கு

3வது இடம் ஸ்டெயினுக்கு

நீண்ட காலம் முதலிடத்தில் இருந்து வரலாறு படைத்தவரான தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் தற்போது 852 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 850 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார். இன்னொரு இங்கிலாந்து வீரரான ஸ்டூவர்ட் பிராட் 5வது இடத்தில் வருகிறார்.

Story first published: Tuesday, November 22, 2016, 17:27 [IST]
Other articles published on Nov 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+