Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி இப்படி நடந்தால் நாம அப்படி அப்படி மேலே போக முடியுமாம்... எப்படி எப்படி?

காலே: இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றால் டெஸ்ட் தர வரிசையில் 2வது இடத்தை இந்தியா எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆகஸ்ட் 12ம் தேதி இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.

தற்போது தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இலங்கையை அது சுத்தமாக வெள்ளையடித்து, அதேபோல ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால் இந்தியா தரவரிசையில் 2வது இடத்தை எட்டிப் பிடிக்கும்.

3-0 என்ற கணக்கில் வென்றால்

3-0 என்ற கணக்கில் வென்றால்

இந்தியா 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றால் தரவரிசையில் 2வது இடம் நமக்கு சாதமாகும். மேலும் இங்கிலாந்து -ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால் இது உறுதியாகும்.

2-1 என்ற கணக்கில் வென்றால்

2-1 என்ற கணக்கில் வென்றால்

ஒரு நாளை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 3-2 என்ற கணக்கிலும் தொடரை வென்றால் நாம் தொடர்ந்து 5வது இடத்திலேயே நீடிப்போம்.

முடிவு மாறினால்

முடிவு மாறினால்

ஒரு வேளை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி நம்மை காலி செய்து விட்டால் நாம் 7வது இடத்திற்குப் போய் விடுவோம். தற்போது அந்த இடத்தில் உள்ள இலங்கை 5வது இடத்திற்கு வந்து விடும்.

முதலிடத்தில் நீடிக்கும் தென் ஆப்பிரிக்கா

முதலிடத்தில் நீடிக்கும் தென் ஆப்பிரிக்கா

தற்போது டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. 2வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

3வது இடத்தில் பாகிஸ்தான்

3வது இடத்தில் பாகிஸ்தான்

நம்மை விட நல்ல நிலையில் உள்ள பாகிஸ்தான் தற்போது 3வது இடத்தில் நீடிக்கிறது. 4வது இடத்தில் நியூசிலாந்து, 6வது இடத்தில் இங்கிலாந்து, 7வது இடத்தில் இலங்கை, 8வது இடத்தில் மேற்கு இந்தியத் தீவுகள், 9வது இடத்தில் வங்கதேசம், 10வது இடத்தில் ஜிம்பாப்வே ஆகியவை உள்ளன.

Story first published: Tuesday, August 11, 2015, 11:26 [IST]
Other articles published on Aug 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+