Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final 2021: "மூன்று" புதிய விதிகள்.. அம்பயர்ஸ்களுக்கு கூடும் "மரியாதை" - செம அறிவிப்பு

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மூன்று புதிய விதிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

யார் வெற்றியாளர்?

யார் வெற்றியாளர்?

இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் கண்டிஷன்ஸ்களை ஐசிசி வெளியிடாமல் இருந்து வந்தது. இதனால், இறுதிப் போட்டி ஒருவேளை டிராவில் முடிந்தாலோ, இரண்டாம் இன்னிங்ஸில் டார்கெட் சேஸிங்கில் ஆட்டம் சமனில் முடிந்தாலோ அல்லது போட்டியே நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டாலோ, யார் வெற்றியாளர்? என்பது குறித்த தெளிவு பிசிசிஐ-க்கு கிடைக்கவில்லை.

விதிமுறைகள்

விதிமுறைகள்

சரி.. அதென்ன பிளேயிங் கண்டிஷன்ஸ்?.. எந்தவொரு கிரிக்கெட் தொடர் நடைபெற்றாலும், அதன் விதிமுறைகளை ஐசிசி வகுத்து கொடுப்பது தான் பிளேயிங் கண்டிஷன். அதாவது ஒவ்வொரு நாளும் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும்?, போட்டி தடைப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? போட்டி ரத்தானால் என்ன செய்ய வேண்டும்? ஓவர்கள் பொறுமையாக வீசினால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது தொடங்கி. அம்பயர்கள் பயன்படுத்தும் லைட் ரீடிங் மீட்டர் வரை அனைத்து விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கும். அதன்படி தான் அம்பயர்கள் செயல்பட முடியும்.

இரு அணிகளும் சாம்பியன்களே

இரு அணிகளும் சாம்பியன்களே

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைப்பிடிக்கப்படும் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது டையில் முடிந்தாலோ இந்தியா, நியூஸிலாந்து என இரு அணிகளும் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். இரு அணிகளில் ஒரு அணிக்கு சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்படாது. போட்டி டிராவில், டையில் முடிந்தால் இரு அணிகளும் சாம்பியன்களே.

அம்பயர்ஸ் கால்

அம்பயர்ஸ் கால்

இவை மட்டுமின்றி, மூன்று புதிய விதிகளை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. அதாவது, பேட்ஸ்மேன்கள் ரன் ஓடும்போது ஒரு பேட்ஸ்மேன் கிரீஸை சரியாகத் தொடாமல் ஓடிவிட்டால் (Short run) மூன்றாவது நடுவர் தாமாகவே அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த முடிவைக் Field அம்பயர்களுக்கு, அடுத்த பந்து வீசுவதற்குள் தெரிவிப்பார். எல்பிடபிள்யு அவுட் குறித்து ஃபீல்டிங் அணியின் கேப்டன் டிஆர்எஸ் ஆய்வுக்குக் கேட்கும் முன், அல்லது பேட்ஸ்மேன் டிஆர்எஸ் கோரும் முன், கள நடுவரிடம் உண்மையாகவே பேடில் பந்துபட்டதா என்பதை உறுதி செய்து கேட்க வேண்டும். எல்பிடபிள்யு அவுட் வழங்கும் முறையில் விக்கெட் (ஸ்டெம்ப்) உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பந்து ஸ்டெம்ப் பெயில்ஸ் பாதிப் பகுதியைத் தொடுமாறு சென்றாலும் அது Umpire's Call வழங்கப்படும். அதேபோல ஸ்டெம்பின் உயரம் மட்டுமல்லாது, பரப்பளவிலும் பாதியளவுக்கு பந்து உரசிச் செல்லும் என்றாலும் Umpire's Call வழங்கப்படும்.

Story first published: Friday, May 28, 2021, 21:31 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+