Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் நான்கே இன்னிங்ஸ்.. விராட் கோலிக்கு ஐசிசி வழங்கிய கவுரவம்.. அரண்டுப்போன உலக நாடுகள்!

அடிலெய்ட்: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி புதிய கவுரவம் ஒன்றை வழங்குவதற்காக ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆசிய கோப்பை தொடரில் தனது கம்பேக்கை கொடுத்த விராட் கோலி இன்று வரை தனது ருத்ரதாண்டவத்தை நிறுத்தாமல் இருக்கிறார். டி20 உலகக்கோப்பையில் அவரை யாராலும் தடுத்த முடியாத வகையில் சென்றுக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது ஆடிய இன்னிங்ஸ் தான் தனது மிகச்சிறந்த இன்னிங்ஸ் என விராட் கோலியே பேசியிருந்தார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் அவரின் இந்த ஆட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறந்த வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து ஐசிசி கவுரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான விருதுக்காக விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 4 இன்னிங்ஸ் மட்டுமே ஆடிய அவருக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது.

4 இன்னிங்ஸ்கள்

4 இன்னிங்ஸ்கள்

கடந்த அக்டோபர் மாதம் கோலி 4 இன்னிங்ஸ்கள் தான் ஆடினார். இதில் நாட் அவுட்டாகாமல் அதிக ஸ்கோர்களை அடித்துள்ளார். மாதத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 49* ரன்களை விளாசினார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்களையும், நெதர்லாந்து அணிக்கு எதிராக 62* ரன்களையும் விளாசினார்.

மேலும் 2 பேர்

மேலும் 2 பேர்

விராட் கோலி மட்டுமின்றி இந்த விருதிற்காக மேலும் 2 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர் அதில் ஒருவர் ஆவார். கடந்த மாதத்தில் மொத்தமாக 7 இன்னிங்ஸ்களில் ஆடிய அவர் 303 ரன்களை விளாசியுள்ளார். மற்றொரு வீரர் ஜிம்பாப்வேவின் சிகந்தர் ராசா ஆகும். இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி வருகிறார்.

முதல் முறை

முதல் முறை

இவர்கள் மூவரில் விராட் கோலிக்கு தான் அந்த பெருமை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் முதல் முறையாக விராட் கோலி ஐசிசி ப்ளேயர் ஆஃப் தி மந்த் விருதை பெறுவார். ஒருவேளை அதில் தவறினால் இந்த மாதமும் அவருடைய கணக்கு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 3, 2022, 19:12 [IST]
Other articles published on Nov 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+