For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி தரவரிசை... டாப் 10 வீச்சாளர்களில் 3 இந்தியர்கள்.. பும்ராவுக்கு 4வது ரேங்க்!

Recommended Video

ICC test ranking: Shami, mayank Agarwal progress

துபாய்: ஐசிசி தரவரிசை பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்களின் 100 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜஸ்பிரீத் பும்ரா 802 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில் சிறப்பான இடங்களை பிடித்துள்ள 100 பௌலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் 908 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். 4வது இடத்தை பும்ரா நிரப்பியுள்ள நிலையில், 7வது மற்றும் 10வது இடங்களில் முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முறையே 790 புள்ளிகள் மற்றும் 780 புள்ளிகள் பெற்று இடம்பிடித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் பட்டியல்

வேகப்பந்து வீச்சாளர் பட்டியல்

இந்த சீசனுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் வரிசையில், வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா சிறப்பான நிலையில் உள்ளது.

முதல் 10 இடங்களில் 3 வீரர்கள்

முதல் 10 இடங்களில் 3 வீரர்கள்

சர்வதேச ஒருநாள் போட்டிகள் பட்டியலில் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். இதேபோல அணியின் பல வீரர்கள் இந்த பட்டியலில் சிறப்பான இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பௌலர்கள் பிரிவிற்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பும்ரா, முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

முகமது ஷமி 7வது இடம், அஸ்வின் 10வது இடம்

முகமது ஷமி 7வது இடம், அஸ்வின் 10வது இடம்

வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் ஜஸ்பிரீத் பும்ரா 802 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ள நிலையில் முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் முறையே 790 மற்றும் 780 புள்ளிகள் பெற்று 7வது மற்றும் 10வது இடங்களில் உள்ளனர்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளர்

சிறந்த வேகப்பந்து வீச்சாளர்

பௌலர்களுக்கான இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் 908 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ஹோல்டர் 3வது இடம்

ஹோல்டர் 3வது இடம்

தென்னாப்பிரிக்காவின் கசிகோ ரபடா 839 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 814 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து

அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் 798 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டும் உள்ளனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

சர்வதேச அளவில் முதல் 10 வேகப்பந்து வீச்சாளர்களில் இந்தியாவின் மூன்று பௌலர்கள் இடம்பிடித்துள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, November 19, 2019, 13:06 [IST]
Other articles published on Nov 19, 2019
English summary
3 Indian bowlers in ICC Ranking's top 10 bowlers list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+