Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது ஐசிசியின் "மேட்ச் பிக்ஸிங்"... வேண்டுமென்றேதான் இந்தியா- பாக்.கை ஒரே பிரிவில் போட்டதாம்!

லண்டன்: 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இது எதேச்சையானது இல்லையாம். வேண்டும் என்றேதான் இரு அணிகளையும் ஒரே பிரிவில் போட்டுள்ளதாம் ஐசிசி.

ஏன்.. என்ன காரணம்.. எதற்காக இப்படி.. என்று நீங்கள் ஆயிரம் கேள்வி கேட்டாலும் ஐசிசி சொல்லும் ஒரே பதில்.. "காசு பணம் துட்டு மணி மணி மற்றும் பிரபலம்" ஆகியவை காரணமாகவே ஒரே பிரிவில் போட்டுள்ளார்களாம்.

இரு அணிகளையும் வேண்டும் என்றேதான் ஒரே பிரிவில் போட்டுள்ளதாக ஐசிசியின் தலைமை எக்சிகியூட்டிவ் டேவ் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

5வது முறையாக

5வது முறையாக

சமீப காலத்தில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெறுவது இது 5வது முறையாகும். உலகக் கோப்பைப் போட்டியிலும், டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் கூட இரு அணிகளும் ஒரே பிரிவில்தான் இடம் பெற்றிருந்தன.

பி பிரிவில்

தற்போது 2017ல் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பின்ஸ் டிராபி தொடரிலும் கூட இரு அணிகளும் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆனால் வேண்டும் என்றே இப்படிப் போட்டுள்ளதாக ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

ஜூன் 4ம் தேதி

ஜூன் 4ம் தேதி

இந்தியாவும், பாகிஸ்தானும் 2017ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிச்சர்ட்சன் விளக்கம்

ரிச்சர்ட்சன் விளக்கம்

இதுகுறித்து ரிச்சர்ட்சன் விளக்கம் தருகையில், சந்தேகமே வேண்டாம். வேண்டும் என்றேதான் நாங்கள் இருவரையும் ஒரே பிரிவில் போட்டுள்ளோம்.

முக்கியத்துவம் வாய்ந்தது

முக்கியத்துவம் வாய்ந்தது

இரு அணிகளும் மோதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது. பெரும் பிரபலம் ஆகிறது. நல்ல கூட்டம் கூடுகிறது. சர்வதேச அளவில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. எனவேதான் இவர்கள் இருவரும் மோதும் போட்டி இடம் பெறும் தொடரும் பிரபலமாகிறது என்றார் ரிச்சர்ட்சன்.

காசு பார்க்கலாம் பாஸ்

காசு பார்க்கலாம் பாஸ்

இவர் டீசன்ட்டாக இப்படிச் சொல்கிறார். உண்மையில் பெரிய அளவில் காசு பார்க்கவே இப்படி இவர்கள் இருவரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறது ஐசிசி. டிவி ஒளிபரப்பு இதனால் முக்கியத்துவம் கிடைக்கும். ரைட்ஸ் பெரிய விலைக்குப் போகும். மைதானத்திலும் பெரும் கூட்டம் கூடும். விளம்பரங்கள் மூலம் பெரும் வருவாய் கிடைக்கும். இதுதான் ஐசிசி மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களின் கணக்காகும்.

இதுவும் மேட்ச் பிக்ஸிங்தானே!

இதுவும் மேட்ச் பிக்ஸிங்தானே!

இரு அணிகளையும் வேண்டும் என்றே ஒரே பிரிவில் போட்டுள்ளோம் என்று வெட்கமே இல்லாமல் பச்சையாக பேசுகிறது ஐசிசி. கிட்டத்தட்ட ஒருவகையில் இதுவும் கூட மேட்ச் பிக்ஸிங்தான்!

ஐசிசி மட்டும்தானா?

ஐசிசி மட்டும்தானா?

ஐசிசி மட்டும்தான் இவர்களை வேண்டும் என்றே ஒரே பிரிவில் போட்டதா அல்லது இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களும் இதற்கு உடந்தையா என்று தெரியவில்லை.

இவனுங்களையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுங்களா தெரியலையே என்ற விவேக்கின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது!

Story first published: Thursday, June 2, 2016, 14:32 [IST]
Other articles published on Jun 2, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+