தோனியை போலவே இன்னொரு வீரர்..!! சிக்சர் அடித்து U19 உலககோப்பை வென்று தந்த தினேஷ் பானா..!!
ஆண்டிகுவா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
இதில், சீனியர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இளம் வீரர்கள் செயல்பட்டனர். யாஷ் துல் அடுத்த விராட் கோலியாகவும், ரஷித் அடுத்த அசாரூதீனாகவும் கருதப்படுகின்றனர்.
இதே போன்று ஆஷ்ட்வால், ஹங்கேர்கர், ராஜ் பானா போன்ற பந்துவீச்சாளர்களும் அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த தோனி?
அடுத்த சச்சின், அடுத்த கோலி, அடுத்த யுவராஜ் , அடுத்த கில்கிறிஸ்ட் என பல பெயர்களை சொல்லி நாம் கேட்டு இருப்போம். ஆனால் அடுத்த தோனி என்று யாராவது சொல்லி நாம் கேட்டு இருப்போமா. தோனியை போல் தனித்துவமாக அதிரடியாக ஆடும் வீரரும், கடும் நெருக்கடியிலும், அவரை போலவே கூலாக விளையாடக் கூடிய விரரையும், அவரை போல் வேகமாக விக்கெட் கீப்பங் செய்ய கூடிய ஒரு வீரரும் இதுவரை யாரும் பார்த்தது இல்லை.

அதிரடி சிக்சர்
ஆனால், அதற்கு விடையாக U-19 இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் பானா விளங்குகிறார். தோனியை போல் ஹேர் ஸ்டைலும், உடல் அமைப்பும் மட்டும் தான் இல்லை. ஆனால் மற்றபடி தோனியை போல் அதிரடியாகவும், நெருக்கடி இன்றி கூலாக விளையாடினார். ஏற்கனவே அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய தினேஷ் பானா.

கூல் கீப்பர்
இறுதிப் போட்டியிலும் பானா காத்தாடி போல் பந்தை மைதானத்துக்கு வெளியே பறக்கவிட்டார். 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், ரன்னுக்கும், பந்துக்கும் வித்தியாசம் குறைந்து நெருக்கடியான சூழல் நிலவியது. அப்போது மைதானத்துக்கு கூலாக வந்த தினேஷ் பானா அதிரயாக 2 சிக்சர் விளாசினார்.
Recommended Video

தோனி போலவே சிக்ஸ்
இதில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது தோனி 2011 உலகடக கோப்பையை எப்படி சிக்சர் அடித்து உலககோப்பையை வென்று கொடுத்தாரோ, அதே போல், அதே ஷாட், அதே இடம் என அச்சு மாறாமல் தினேஷ் பானா சிக்சர் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த 2 புகைப்படத்தையும் ஓப்பிட்டு ரசிகர்கள் தங்களுக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டதாக கொண்டாடி வருகின்றனர். விக்கெட் கீப்பிட்ஙகிலும் தோனியை போல் கேட்ச் பிடித்து, அவரை போலவே வேகமாக ஸ்டம்பிங்கும் செய்கிறார் இந்த தினேஷ் பானா.


Click it and Unblock the Notifications