For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்டரைக்ரேட் 500..!! தோனி மாதிரி விளையாடும் U-19 இந்திய வீரர்..!! ஃபைனலில் பெரும் எதிர்பார்ப்பு..

ஆண்டிகுவா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல திறமையான இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

சீனியர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இவர்களது திறமை உள்ளது. இதில் பெரும்பாலான வீரர்கள் எதிர்காலத்தில் பெரும் நட்சத்திரமாக விளங்க வாய்ப்புள்ளது.

யாஷ் துல் அடுத்த விராட் கோலியாகவும், ரஷித் அடுத்த அசாரூதீனாகவும் கருதப்படுகின்றனர். இதே போன்று ஆஷ்ட்வால், ஹங்கேர்கர், ராஜ் பானா போன்ற பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

அடுத்த தோனி?

அடுத்த தோனி?

இந்த நிலையில், தோனிக்கு பிறகு எந்த ஒரு அதிரடி வீரரையும் இந்திய அணி இதுவரை கண்டு பிடிக்கவில்லை. ரிஷப் பண்ட் திறமையான வீரராக அறியப்பட்டாலும், சர்வதேச ஒருநாள், டி20 போட்டியில் அதனை அவர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் கில்கிறிஸ்ட்க்கு இணையாக தான் ரசிகர்களால் போற்றப்படுகிறார்.

தினேஷ் பானா

தினேஷ் பானா

ஆனால் இம்முறை தோனியை போலவே அதிரடியாக ஆடக் கூடிய விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டார். ஆம், ஹரியானாவை சேர்ந்த 17 வயதான தினேஷ் பானா , அண்டர் 19 கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார். ஆனால் தோனியை போல் தனித்துவமான ஷாட்களை ஆடவில்லை என்றாலும், இவர் பிக் ஹிட்டருக்கு ஏற்ற இலக்கணத்தில் கலக்குகிறார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போது களத்துக்கு வந்தார் தினேஷ் பானா. எதிர்கொண்ட நான்கே பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார் தினேஷ் பானா. இதன் மூலம் 260, 270 ஐ தான் இந்திய அணி தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 290 ஐ ஸ்கோர் தொட்டது.

எகிறிய எதிர்பார்ப்பு

எகிறிய எதிர்பார்ப்பு

இதனால், தினேஷ் பானா மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இறுதி ஆட்டத்திலும் தினேஷ் பானா கலக்குவார் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் இவரது ஆட்டத்தை காண வெயிட்டிங். ஏற்கனவே தினேஷ் பானாவை பல ஐ.பி.எல். அணிகள் குறிவைத்துள்ளன. பானா காத்தாடியை போல் பந்தை பறக்கவிடும் தினேஷ் பானாவின் ஸ்பேஷல் ஆட்டத்தை இன்று ரசிகர்கள் பைனலில் பார்க்கலாம்.

Story first published: Saturday, February 5, 2022, 16:30 [IST]
Other articles published on Feb 5, 2022
English summary
ICC U-19 WC Final – Here is the Next Dhoni of Team India Dinesh Bana ஸ்டரைக்ரேட் 500..!! தோனி மாதிரி விளையாடும் U-19 இந்திய வீரர்..!! ஃபைனலில் பெரும் எதிர்பார்ப்பு..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+