For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U-19 உலககோப்பை பைனல்- இங்கிலாந்தை அடிச்சி தூக்கிய இந்தியா..!! இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!!

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் அரையிறுதியில் விளையாடிய அணியையே, இறுதிப் போட்டிக்கும் தேர்வு செய்துள்ளது.

டாஸை இழந்த இந்திய அணி, இங்கிலாந்து விக்கெட்டுகளை விரைவில் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.

ரவிகுமார் அபாரம்

ரவிகுமார் அபாரம்

இங்கிலாந்து அணியின் பலமே, அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். அனைவரும் அதிரடியாக ஆட கூடியவர்கள். ஆனால் ரவிகுமார் தாம் வீசிய முதல் ஓவரின் 5வது பந்திலே ஜாக்கப் பெத்தல் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து இங்கிலாந்து கேப்டன் டாம் பிரஸிட் ரவிகுமார் பந்துவீச்சில் டக் அவுட்டாகினார்.

ராஜ் பவா அசத்தல்

ராஜ் பவா அசத்தல்

18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தாலும், தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் அதிரடியாக விளையாடினார். இருப்பினும் ராஜ் பவா வீசிய பந்தை அடிக்க முயல, கேப்டன் யாஷ துல்லிடம் பிடிப்பட்டு 27 ரன்களில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வில்லியம் லக்ஸ்டன் விக்கெட்டையும் ராஜ் பவா வீழ்த்தினார்.

இங்கிலாந்து 47/5

இங்கிலாந்து 47/5

இதன் பின் களமிறங்கிய பெல் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் தினேஷ் பானாவிடம் பிடிப்பட இங்கிலாந்த அணி 47 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தார் ராஜ் பவா, ரேஹான் அகமதை 10 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 6வது விக்கெட்டை 61 ரன்களில் இழந்தது. தற்போது வரை ரவிகுமார் 2 விக்கெட்டையும், ராஜ் பவா 4 விக்கெட்டையும் வீத்தியுள்ளனர்.

குறைவான இலக்கு

குறைவான இலக்கு

முதலில் பேட் செய்யும் இங்கிலாந்து அணி வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை எவ்வளவு குறைவான ரன்களில் இங்கிலாந்தை சுருட்ட முடியமோ, அந்த அளவுக்கு இந்திய அணிக்கு நல்லது. இது பேட்டிங்கிற்கு சாமகமான மைதானம் என்று கணித்த சாமுவேல் பத்ரியை ரசிகர்கள் வைத்து செய்து வரகின்றனர்.

Story first published: Saturday, February 5, 2022, 20:10 [IST]
Other articles published on Feb 5, 2022
English summary
ICC U-19 World cup England loss 6 wickets vs India in Final U-19 உலககோப்பை பைனல்- இங்கிலாந்தை அடிச்சி தூக்கிய இந்தியா..!! இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+