பெரிய சான்ஸ்! கெயிஃப், கோலி சாதனையை படைப்பாரா யாஷ் துல்.. ! இந்தியாவின் புதிய ஹீரோ உதயம்..!
ஆண்டிகுவா: ஐ.சி.சி. U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய சாதனையை படைக்க உள்ளது.
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில் இதுவரை இந்திய அணி 250 போட்டிகளில் விளையாடி,
190 போட்டிகளில் வென்று 55 போட்டிகளில் தோல்வியை தழுவியது. வெற்றி சதவீதம் 77.32 ஆகும். கடந்த 1988ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 8 முறை உலககோப்பை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

2000 சாம்பியன்
அண்டர் 19 கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது 2000 ஆம் ஆண்டில் தான். முகமது கெயிப் தலைமையிலான இந்திய அணியில் யுவராஜ் சிங்,வேணுகோபால் ராவ் போன்ற வீரர்கள் ஸ்டார் அந்தஸ்தை பெற்றனர். இதில் யுவராஜ் சிங், 203 ரன்கனளை விளாசி, 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

2008 சாம்பியன்
மலேசியாவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை நம் வாழ்வில் மறக்க முடியாதவை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் கோலி, மணிஷ் பாண்டே, ஜடேஜா, சௌரப் திவாரி ஆகியோர் அடுத்த கட்டத்திற்கு சென்றனர்.

2012 சாம்பியன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் உன்முகுத் சந்த் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் இறுதி போட்டியில் உன்முகுத் சந்த் சதம் விளாச அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆனால், அதன் பின் அவரால் சாதிக்க முடியவில்லை. அந்த தொடரில் விளையாடிய பாபா அப்ரஜித், ஹனுமா விஹாரி, சந்தீப் சர்மா ஆகியோருக்கு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
Recommended Video

2018 சாம்பியன்
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பையை இந்திய அணி 4வது முறையாக வென்றது. இந்த தொடரில் பிரித்வி ஷா, சுப்மான் கில் என பெரிய நட்சத்திர பட்டாளத்தை டிராவிட் பயிற்சி அளித்து கோப்பையை வென்றார். சுப்மான் கில் இந்த தொடரில் 372 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இதே போன்று யாஷ் துல் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications