Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U-19 உலககோப்பை இறுதிப் போட்டி- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்- இந்தியா பிளேயிங் XI

ஆண்டிகுவா: ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்று மழை பெய்ததால் ஆடுகளம் ஒரு அளவிற்கு ஈரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி டாசை இழந்தாலும், விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் அது பெரும் சாதகமாக அமையும்.

இந்த மைதான ஆடுகளத்தை ஆய்வு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சாமுவெல் பத்ரி, ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை தரும் விதமாக மைதானம் இருக்கும் என்று கணித்துள்ளார். விக்கெட்டுகளை விரைவில் எடுத்தால் தான் பந்துவீசும் அணி வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார்.

ICC U-19 World cup Final-India vs England – India bowling

சாமுவேல் பத்ரியின் கணிப்பு சரியாக இருக்குமா என்று போக போக தான் தெரியும். இதனால் இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணி விளையாடுவதும் கொஞ்சம் பாதகமாக பார்க்கப்படுகிறது. மழையும் குறுக்கிடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் 1,ஆங்கிரிஷ், 2, ஹர்னூர் சிங், 3,ரஷித், 4, யாஷ் துல், 5, நிஷாந்த் சிந்து, 6, தினேஷ் பானா, 7, ராஜ் பவா, 8, ஹங்கர்கேகர், 9, ரவிகுமார், 10,கௌசல் தாம்பே, 11, விக்கி ஆஸ்ட்வால்

இங்கிலாந்து அணியின் பினேயிங் லெவன் 1, ஜார்ஜ் தாமஸ், 2,ஜாக்கப் பெத்தஃப, 3, டாம் பிரஸிட், 4,ஜேம்ஸ், 5, வில்லியம், 6,ஜார்ஜ் பெல், 7. ரஹ்மான் 8,அலெக்ஸ் 9.செல்ஸ் 10, தாமஸ், 11, ஜோஸ்வா

Story first published: Saturday, February 5, 2022, 18:27 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+