Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U-19 உலககோப்பை இறுதிப் போட்டி- டாஸ் வென்றால் இந்தியா என்ன செய்யனும்? ஆடுகளம் எப்படி? - பிளேயிங் XI

ஆண்டிகுவா: ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதில் இந்தியா, இங்கிலாந்து அணி இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

இந்த மைதானம் ஆடுகளம் முதல் 10 ஓவரில் வேகப்பந்துவீச்சுக்கு சாதமாக செயல்படும். பொதுவாக இந்த மைதானத்தில் பந்து, பேட்டிற்கு வேகமாக வராது.

ICC U-19 World cup Final-India vs England Preview Playing xi

ஆட்டம் செல்ல, செல்ல மிகவும் தொய்வாக ஆடுகளம் மாறிவிடும். இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி பெரிய ஷாட் ஆட கொஞ்சம் சிரமப்படும். இதனை கருத்தில் கொண்டு டாஸ் வென்றால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதே சிறந்தது. இந்திய அணி 250 ரன்கள் அடித்தால், இதுவரை யாருமே அதனை வெற்றிக்கரமாக துரத்தியது இல்லை என்பது வரலாறு.

அதனால் முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்காக நிர்ணயிக்க வேண்டும். ஒரு வேளை இந்திய அணி சேஸ் செய்வது போல் அமைந்தால் இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விடக் கூடாது. விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தும் அனைத்து செயலையும் இந்திய அணி மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக டாம் பிரஸிட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும். இந்திய அணி அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்களை வைத்து தான் இறுதிப் போட்டியில் விளையாடும். உத்தேச அணி 1,ஆங்கிரிஷ், 2, ஹர்னூர் சிங், 3,ரஷித், 4, யாஷ் துல், 5, நிஷாந்த் சிந்து, 6, தினேஷ் பானா, 7, ராஜ் பவா, 8, ஹங்கர்கேகர், 9, ரவிகுமார், 10,கௌசல் தாம்பே, 11, விக்கி ஆஸ்ட்வால்

Story first published: Saturday, February 5, 2022, 18:48 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+