Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவிகுமார்..!! இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க..?? U-19 உலககோப்பை பைனலில் அசத்தல் பவுலிங்

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் அரையிறுதியில் விளையாடிய அணியையே, இறுதிப் போட்டிக்கும் தேர்வு செய்துள்ளது.

டாஸை இழந்த இந்திய அணி, இங்கிலாந்து விக்கெட்டுகளை விரைவில் எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.

பலமான பேட்ஸ்மேன்

பலமான பேட்ஸ்மேன்

இங்கிலாந்து அணியின் பலமே, அவர்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான். அனைவரும் அதிரடியாக ஆட கூடியவர்கள். இதனால் இந்தியாவுக்கு பெரும் சவால் காத்திருந்தன. ஆடுகளத்தில் புற்களும் இல்லாததால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இது நெருக்கடியை தரும் என்றும், விக்கெட்டுகளை வீழ்த்துவது சுலபம் அல்ல என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாமுவேல் பத்ரி தெரிவித்திருந்தார்.

ரவிகுமார் அபாரம்

ரவிகுமார் அபாரம்

ஆனால், இதை எல்லாம் ரவிகுமார் கண்டுகொள்ளவில்லை. புது பந்தில், தனது இடதுகை வேகப்பந்துவீச்சில் பந்தை பேச வைத்தார் ரவிகுமார். தனது முதல் ஓவரின் 5வது பந்தில் ரவிகுமார் வீசிய இன்ஸ்விங்கில் ஜாக்கப் பெத்தல் எல்.பி. டபிள்யூ ஆனார். இதனால் இந்திய அணி வீரர்கள் துள்ளி குதித்தனர்.

முதல் ஓவரில் விக்கெட்

முதல் ஓவரில் விக்கெட்

ரவி குமார் நாக் அவுட் போட்டிகளில் புது பந்தில், தனது முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதையே தொழிலாக வைத்துள்ளார். காலிறுதியில் மூன்றாவது பந்திலும், அரையிறுதியில் முதல் பந்திலும், இறுதிப் போட்டியில் முதல் ஓவரின் 5வது பந்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கேப்டன் அவுட்

கேப்டன் அவுட்

ஆனால், ரவிகுமார் அத்துடன் நிற்கவில்லை. இங்கிலாந்து அணி கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஸ்டம்புகளையும் பதம் பார்ததார் ரவிகுமார்.நடப்பு தொடரில் முதல் டக் அவுட்டான இங்கிலாந்து வீரர் என்ற சோகமான பெருமை அவருக்கு கிடைத்தது. ஆனால் ரவிகுமாரின் பந்துவீச்சு மட்டும் தான் எடுப்படுகிறது. ஹங்கர்கேகர் ஓவரை இங்கிலாந்து வீரர்கள் சுலபமாக எதிர்கொண்டு வருகின்றனர்.

Story first published: Saturday, February 5, 2022, 19:23 [IST]
Other articles published on Feb 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+