Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U-19 உலககோப்பை- பிரமிக்க வைக்கும் இந்தியாவின் பந்துவீச்சு..!! விரைவில் சீனியர் அணியில் வாய்ப்பு..!!

ஆண்டிகுவா: ஒரு காலத்தில் இந்தியாவில் வேகப்பந்துவீச்சாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஸ்ரீநாத், ஜாகீர் கானுக்கு காயம் என்றால், மாற்று வீரர்களை களமிறக்க பி.சி.சி.ஐ. திணறும். சுழற்பந்துவீச்சிலும் அதே நிலை தான்.

Recommended Video

U19 World Cup Semi Final-ல் Virat Kohli-ன் சாதனையை சமன் செய்த Yash Dhull

அவ்வளவு ஏன், இந்தியாவில் 140 கி.மீ. வேகத்தில் பந்துவீச ஆளே கிடையாது. அப்படி எதாவது யாராவது பந்துவீசினால் அது தலைப்பு செய்தி ஆகும்.

ஆனால் இன்று நிலைமை அப்படி அல்ல, இந்தியாவில் வேகப்பந்துவீச்சாளர்கள் கொட்டி கிடக்கிறார்கள். தற்போது அண்டர் 19 கிரிக்கெட் மூலம் மேலும் வேகப்பந்துவீச்சாளர்களின் பட்டாளமே உருவாகியுள்ளது.

ரவிகுமார்

ரவிகுமார்

இந்திய U19 அணியில் இடம்பெற்றுள்ள இடதுகை வேகப்பந்துவிச்சாளர் ரவிகுமார், கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் குறைவு. இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கொஞ்சம் கடினம் என்பதால், அனைத்து அணிகளும் யாரேனும் ஒரு இடதுகை வேகப்பந்துவிச்சாளர்களையாவது அணியில் சேர்த்துவிடுவார்கள். இதில் ரவிகுமார் அனல் பறக்கும்

ஹங்கர்கேகர்

ஹங்கர்கேகர்

ராஜவர்தன் ஹங்கர்கேகர் குறித்து நிறைய பேசிவிட்டோம். அவர் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர். அதே போல் வேகப்பந்துவீச்சிலும் அவர் தான் ஓபனிங். 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய அவர்,நடப்பு தொடரில் மிகவும் குறைவான ரன்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ராஜ் பவா

ராஜ் பவா

நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் ராஜ் பவா. ஆனால் அவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பது தான் கூடுதல் சிறப்பே. பிற்காலத்தில் இந்திய அணியின் பெரிய ஆல் ரவுண்டராக வரும் ராஜ் பவா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

ஆஸ்ட்வால்

ஆஸ்ட்வால்

அஸ்வின், சாஹல், குல்தீப், அக்சர் பட்டேல், ஜடேஜாவிற்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த குறையையும் போக்கியுள்ளனர் அண்டர் 19 வீரர்கள். ஏற்கனவே கடந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கனான உலகக் கோப்பையில் ஜொலித்த பிஸ்னாய் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது விக்கி ஆஸ்ட்வாலும் ஜொலித்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பையில் 12 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Thursday, February 3, 2022, 18:33 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+