For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U-19 உலககோப்பை ஆஸியை பந்தாட்டிய இந்தியா.. தொடர்ந்து 4வது முறையாக இறுதிபோட்டிக்கு தகுதி..!!

ஆண்டிகுவா: அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின.

இதுவரை கடந்த 9 ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆசிய அணி எதாவது ஒன்று இடம்பிடித்துவிடும். தற்போது இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், ஆசிய அணிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஆங்கிரிஷ் 6 ரன்கள், ஹர்னூர் சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

யாஷ் துல் சதம்

யாஷ் துல் சதம்

37 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷாயிக் ரஷித் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். விராட் கோலியை போல் சிறப்பான ஷாட்களை விளையாடிய யாஷ் துல், சதம் விளாசினார். இதன் மூலம் U19 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய 3வது இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். 110 ரன்கள் எடுத்திருந்த போது யாஷ் துல் துரதிர்ஷ்டம் விதமாக ரன் அவுட்டாகினார்.

291 ரன்கள் இலக்கு

291 ரன்கள் இலக்கு

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரஷித் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஹங்கர்கேகர் 1 சிக்சர், 1 பவுண்டரி விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் பானா 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.

அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தால் அண்டர் 19 உலகக் கோப்பையில் தோற்றது இல்லை என்ற வரலாறு உள்ளது. இந்த நிலையில் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் வெய்லி, ரவிகுமார் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கேம்பேல், மில்லர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Recommended Video

U19 WC 2022: Dhull Ton leads India to win over Australia, to face England in final | OneIndia Tamil
இந்தியா சாதனை

இந்தியா சாதனை

கேம்பேல் 30 ரன்கள், மில்லர் 38 ரன்கள் எடுத்து 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்தது. அப்போது இருவரின் விக்கெட்டையும் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வீழ்த்தினர்.கேப்டன் கூப்பர் 3 ரன்களிலும்,ராதாகிருஷ்ணன் 11 ரன்களிலும் வெளியேற ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அதிகபட்சமாக லச்லான் ஷா மட்டும் அரைசதம் அடிக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக அண்டர் 19 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 7:40 [IST]
Other articles published on Feb 3, 2022
English summary
ICC U-19 World cup India beat Australia and qualifies for 4th consecutive finalU-19 உலககோப்பை ஆஸியை பந்தாட்டிய இந்தியா.. தொடர்ந்து 4வது முறையாக இறுதிபோட்டிக்கு தகுதி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+