Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U-19 உலககோப்பை கிரிக்கெட்-அரையிறுதியில் இந்தியா Vs ஆஸி. மோதல்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

ஆண்டிகுவா: அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும் மோத உள்ளது.

நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் பெரும்பாலனோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் உடல் தகுதியுடன் இருந்த வீரர்களை வைத்து இந்திய அணி வென்றது.

ஒரே கவலை

ஒரே கவலை

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய அணி வீரர்களும் குணமடைந்து போட்டியில் களமிறங்க தயாராக உள்ளனர். கேப்டன் யாஷ் துல், ஷாயிக் ரஷித் போன்ற திறமையான வீரர்கள் கொரோனாவால் சில போட்டிகளை தவறவிட்டது பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது அவர்கள் முழு உடல் தகுதியுடன் பழைய ஃபார்மில் விளையாடுவார்களா என்பது மட்டும் தான் ஒரே கவலை.

நல்ல ஃபார்ம்

நல்ல ஃபார்ம்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆங்கிரிஷ், ஆல் ரவுண்டர் ராஜ் பவா, ஹங்கர்கேகர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங்கிற்கு இந்த தொடர் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் அரையிறுதியில் அவரது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்தியாவின் பிளான்

இந்தியாவின் பிளான்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டியாகு வெய்லி, 2 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார். இதே போன்று கேம்ப்பேள், கோரி மில்லர், கூப்பர் ஆகியோரும் அதிரடியாக ஆட கூடியவர்கள். இலங்கை அணி தங்களது சுழற்பந்துவீச்சை வைத்து கொண்டு , ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளித்து வீழ்த்தியது. இதனால் இந்தியாவும் அதே பார்முலாவை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.

யாருக்கு வெற்றி?

யாருக்கு வெற்றி?

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடித்து 250 ரன்களுக்கு மேல் அடித்தால் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம். சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்ட்வால், வேகப்பந்துவீச்சாளர் ரவிகுமார், ஹங்கர்கேகர் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளிக்க காத்துள்ளனர். சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்தப் போட்டி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கும். தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா உள்ளது

Story first published: Tuesday, February 1, 2022, 23:30 [IST]
Other articles published on Feb 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+