Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U-19 உலகக்கோப்பை: “அந்த ஒரு ப்ளான் கைக்கொடுத்தது” ஆஸி.யை வீழ்த்தியது எப்படி? யாஷ் துல் விளக்கம்!!

ஆன்டிகுவா: U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது.

Recommended Video

U19 World Cup Semi Final-ல் Virat Kohli-ன் சாதனையை சமன் செய்த Yash Dhull

ஆஸ்திரேலிய அணியில் வெய்லி, கூப்பர், கோரி மில்லர் ,வெயிட்னி போன்ற திறமையான விரர்களை இந்தியா எப்படி சமாளிக்கும் என்று விமர்சகர்களும் எதிர்நோக்கி காத்து இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு இந்திய அணி போட்ட பிளான் தான் காரணம்.

முதல் பிளான்

முதல் பிளான்

இது தொடர்பாக வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் யாஷ் துல், அரையிறுதியில் எப்படி விளையாட வேண்டும். என்ன ஸ்கோர் அடிக்க வேண்டும் என்பது குறித்து முன்பே பிளான் போட்டு வைத்திருந்தோம். விக்கெட் விழாமல் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதே முதல் பிளான்.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

அதில் கிட்டதட்ட தொடக்க வீரர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் 13 ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இதனையடுத்து நானும், ரஷித்தும் எவ்வித பெரிய ஷாட்களையும் ஆடாமல் 40வது ஓவர் வரை விக்கெட் விழாமல் விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

அதன் படி, சிங்கிள்ஸ் ஆடி நெருக்கடி இல்லாமல் ரன்களை சேர்த்தோம். ஒரு அளவுக்கு நல்ல ஸ்கோர் வந்ததும் கொஞ்சம் அதிரடியை காட்டினோம். இதனால் நாங்கள் நினைத்த ஸ்கோர் வந்தது. இதன் பின்னர் மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி கடைசி 10 ஓவரில் 100 ரன்கள் அடித்துவிட்டனர். இதனால் எங்களுக்கு 290 ரன்கள் என்ற பெரிய இலக்கு கிடைத்தது.

பெருமையாக கருதுகிறேன்

பெருமையாக கருதுகிறேன்

பெரிய இலக்கை துரத்தும் போது, எதிரணி வீரர்கள் சிலர் தவறை செய்வார்கள். இதனால் எங்களது பந்துவீச்சாளரும் நெருக்கடி இன்றி பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர். சதம் விளாசிய மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெயர் கிடைத்துள்ளது பெருமையாக கருதுகிறேன். பயோ பபுளில் இருப்பது கடினமாக உள்ளது. இருப்பினும் நாங்கள் கற்று கொள்கிறோம்.

Story first published: Thursday, February 3, 2022, 16:35 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+