
இந்தியா பலம்
இந்திய அணி குரூப் பிரிவில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளையும், நாக் அவுட் சுற்றில் வங்கதேசம் மற்றும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக யாஷ் துல், ஷாயிக் ரஷித் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர்.

ஒரு மைனஸ்
நடுவரிசையில் தினேஷ் பானா, ஆல் ரவுண்டர் ராஜ் பவா, ஹங்கர்கேக்கர், நிஷாந்த் சிந்து ஆகியோர் உள்ளனர். நல்ல பார்மில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ஆங்கிரிஷ் அரையிறுதியில் சொதப்பினார். இதனால் இறுதி போட்டியில் செய்த தவறை திருத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஒரே மைனசாக மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் பார்க்கப்படுகிறார். இதனால் இறுதிப் போட்டியில் அவர் ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்தியா பந்துவீச்சு
மற்ற படி பந்துவீச்சில் ரவிகுமார், ஹங்கர்கேகர், சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்ட்வால், நிஷாந்த் சிந்து ஆகியோர் உள்ளனர். இந்திய அணி இறுதிப்போட்டியில் 250 ரன்களுக்கு மேல் அடித்தால் வெற்றி நிச்சயம். இந்த நிலையில் , இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு அண்டர் 19 உலககோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. குரூப் பிரிவில் வங்கதேசம், யு.ஏ.இ, கனடா ஆகிய அணிகளையும், நாக் அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொண்டு இங்கிலாந்து அணி வென்றது.

இங்கிலாந்து நட்சத்திரங்கள்
இங்கிலாந்து அணி கேப்டன் டாம் பிரஸ்ட், நடப்பு தொடரில் 292 ரன்களை குவித்துள்ளார். இதே போன்று வில்லியம் லக்ஸ்டனும் நல்ல பார்மில் உள்ளார். நடப்பு தொடரில் அவர் 152 ரன்கள் அடித்துள்ளார். இங்கிலாநுது அணியில் வேகப்பந்துவீச்சாளர் 13 ஜோஸ்வா பைடன் 13 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர் ரேஹான் அகமது 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர்கள் இந்திய அணிக்கு நெருக்கடியை தருவார்கள். கடைசியாக இவ்விரு அணிகளும் விளையாடிய 5 போட்டியில் இந்தியா 3 முறையும், இங்கிலாந்து 2 முறையும் வென்றுள்ளது. இந்தியா 5வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











