For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U-19 உலககோப்பை ஜூனியர் கோலி சதம்..!! அரையிறுதியில் ஆஸி.க்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா..!!

ஆண்டிகுவா: அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 291 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது

.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.

ஆங்கிரிஷ் 6 ரன்களில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். ஹர்னூர் சிங் 16 ரன்களில் வெளியேறினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

37 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷாயிக் ரஷித் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்த பிறகு, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரிகளை இந்த ஜோடி பறக்கவிட்டு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை தந்தனர்.

யாஷ் துல் சதம்

யாஷ் துல் சதம்

விராட் கோலியை போல் சிறப்பான ஷாட்களை விளையாடிய யாஷ் துல், சதம் விளாசினார். இதன் மூலம் விராட் கோலி, உன்குத் சந்த்துக்கு பிறகு U19 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். 110 ரன்கள் எடுத்திருந்த போது யாஷ் துல் துரதிர்ஷ்டம் விதமாக ரன் அவுட்டாகினார்.

291 ரன்கள் இலக்கு

291 ரன்கள் இலக்கு

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரஷித் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஹங்கர்கேகர் 1 சிக்சர், 1 பவுண்டரி விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் பானா 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.

Recommended Video

U19 WC 2022: Dhull Ton leads India to win over Australia, to face England in final | OneIndia Tamil
அதிர்ச்சி தொடக்கம்

அதிர்ச்சி தொடக்கம்

இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தால் அண்டர் 19 உலகக் கோப்பையில் தோற்றது இல்லை. இந்த நிலையில் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் வெய்லி, ரவிகுமார் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த ஒன்பது U19 உலகக் கோப்பையில் எதாவது ஒரு ஆசிய அணியாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 2, 2022, 23:20 [IST]
Other articles published on Feb 2, 2022
English summary
ICC u19 semi final Ind Vs Aus- India set 291 Runs to win U-19 உலககோப்பை ஜூனியர் கோலி சதம்..!! அரையிறுதியில் ஆஸி.க்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+