Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் பேட்டிங்..!! கோலி, அசாரூதீனை போல் விளையாடும் ஜூனியர்கள்.. U-19 இந்திய அணி ரன் குவிப்பு…!

ஆண்டிகுவா: அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.

ஆடுகளம் தொய்வாக காணப்பட்டதால் பந்து பழசாகும் வரை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மெதுவாக விளையாடினர்.

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

இந்த தொடரில் அதிரடியாக விளையாடிய ஆங்கிரிஷ் 30 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது வில்லியம்ஸ் சால்ஸ்மேன் வீசிய பந்தில், ஆஃப் ஸ்டம்ப் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இதனையடுத்து ஹர்னூர் சிங்கும் ஷாட் பாலை எதிர்கொள்ள முடியாமல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இந்திய அணி 12.3 ஓவரில் 37 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷாயிக் ரஷித் ஜோடி சேர்ந்தனர். இருவ்ரும் கொஞ்சம் கூட நெருக்கடி இல்லாமல் கூலாக விளையாடினர். ஒரு முனையில் ரஷித் நங்கூரம் போட்டு நிற்க, மறுமுனையில் யாஷ் துல் விராட் கோலியை போல் பந்துவீச்சாளர்களை தனது ஷாட் மூலம் ஆதிக்கம் செலுத்தினார்.

யாஷ் துல்

யாஷ் துல்

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சுழற்பந்துவீச்சை விராட் கோலி எப்படி எதிர்கொள்வாரோ, அதே போல் யாஷ் துல் ஷாட் ஆடி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். மறுபுறம் அசாரூதீன் எப்படி தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் சிங்கிள்ஸ் ஆடியும், மோசமான பந்தை பவுண்டரிக்கு விரட்டுவாரோ அதே போல் ஷாயிக் ரஷித் ஆடினார்.

Recommended Video

India vs West Indies ODI series to be played in front of empty stands | Oneindia Tamil
150 ரன்கள் ஜோடி

150 ரன்கள் ஜோடி

இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால் விராட் கோலியை போல் யாஷ் துல்லும் டெல்லியை சேர்ந்தவர். அசாரூதீன் போல் ஷாயிக் ரஷித்தும் ஆந்திராவை சேர்ந்தவர். தற்போது இந்த ஜோடி 150 ரன்களை மேல் தாண்டி சேர்த்துள்ளது. தற்போது இரவரும் அரைசதம் தாண்டி விளையாடி வருகின்றனர். இருவரும் கோவிட்டிலிருந்து குணமடைந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, February 2, 2022, 22:21 [IST]
Other articles published on Feb 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+