Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி அளித்த இன்ப அதிர்ச்சி..! குஷியில் U-19 இந்திய அணி வீரர்கள்..! திரும்பும் பழைய வரலாறு..!

ஆண்டிகுவா: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்திய நேரப்படி இந்த போட்டி வரும் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

5வது முறையாக U-19 உலககோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இங்கிலாந்து பாதை

இங்கிலாந்து பாதை

24 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி வந்துள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியின் பாதை மிகவும் எளிதாகவே அமைந்தது. குரூப் பிரிவில் வங்கதேசம், யு.ஏ.இ, கனடா ஆகிய அணிகளையும், நாக் அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளை மட்டுமே இங்கிலாந்து எதிர்கொண்டது.

இந்தியா பாதை

இந்தியா பாதை

ஆனால் இந்திய அணி குரூப் பிரிவில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளையும், நாக் அவுட் சுற்றில் வங்கதேசம் மற்றும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டு அணியிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி

இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். யாஷ் துல், ஷாயிக் ரஷித், கவுசல் தாம்பே ஆகியோருக்கு வீடியோ கால் செய்து விராட் கோலி, இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டை தெரிவித்தார். மேலும், U-19 இந்திய அணி கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளதால், தனது அனுபவத்தையும், சில அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

திரும்மபிய வரலாறு

திரும்மபிய வரலாறு

விராட் கோலியுடன் பேசியது மிகவும் உற்சாகத்தை தந்துள்ளதாக இந்திய அணி கேப்டன் யாஷ் துல் தெரிவித்தார். இதே போன்று 2008ஆம் ஆண்டு விராட் கோலி அண்டர் 19 கேப்டனாக இருந்த போது இறுதிப் போட்டிக்கு முன் சச்சின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கினார். தற்போது விராட்டும் அதே செயலை செய்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 22:54 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+