U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
டர்பன் : மகளிருக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

டி20 போட்டியாக நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய மகளிர் அணி ஆக்ரோஷமாக செயல்பட்டனர்.
இதனால் இலங்கை அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதிகபட்சமாக இலங்கை அணியின் விஷ்மி குனரத்னே 25 ரன்களும் உமையா 13 ரன்களும் எடுக்க மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி 59 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்திய வீராங்கனை வர்ஷா சோப்ரா ஐந்து ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். சிபாலி வர்மா 15 ரன்களிலும், ஸ்வேதா 13 ரன்களையும் ஆட்டம் இழக்க கடைசிவரை விளையாடிய சௌமியா 28 ரன்கள் சேர்த்தார்.
இதை அடுத்து இந்திய மகளிர் அணி 7.2 ஓவரில் வெற்றி இலக்கை மூன்று விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று ஆட்டத்தில் வென்று ஒரு ஆட்டத்தில் தோல்வி தழுவி குரூப் ஒன் பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications