Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நோ பால், Wide கிடையாது.. ஒரே பந்தில் 9 ரன்கள் விட்டு கொடுத்த இந்தியா..கிரிக்கெட் உலகில் அரிய நிகழ்வு

ஹராரே: ஐசிசி U19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி ஒரே பந்தில் 9 ரன்களை பெற்ற அரிய நிகழ்வு நடந்தது. பொதுவாக நோ பால் அல்லது Wide பந்து வீசப்பட்டால் தான் அது ஒரே பந்தாக கணிக்கடப்படும். ஆனால், இந்த பந்து Wide Ball கூட கிடையாது.அப்படி இருக்கும் போது எப்படி 9 ரன்கள் கிடைத்தது என்பதை தற்போது காணலாம்.

கிரிக்கெட் களத்தில் அரிதாகக் காணக்கூடிய இந்த வினோத தருணம், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் போது அரங்கேறியது. ஆப்கானிஸ்தான் கேப்டன் மஹ்பூப் கான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்திருந்தார். ஆரம்ப விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடிவந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, 17வது ஓவரில் தான் இந்த அதிசியம் நிகழ்ந்தது.

அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் தேவேந்திரன் ஒரு ரன் மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால், கடைசிப் பந்து ஆட்டத்தின் போக்கையே திடீரென மாற்றியது. பேட்ஸ்மேன் ஃபைசல் ஷினோஜாதா லெக்-சைடு ஷாட் அடிக்க முயற்சி செய்து பந்தை தவறவிட்டார். பந்து விக்கெட் கீப்பர் அபிகியான் குண்டுவிடம் சென்றபோது, அவரால் அதனைச் சரியாகப் பிடிக்க முடியவில்லை. பந்து பின்னர் தரையில் வைக்கப்பட்டிருந்த ஃபீல்டிங் அணியின் ஹெல்மெட்டின் மீது பட்டு, பவுண்டரி நோக்கி உருண்டது.

இதன் விளைவாக, ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து அபராத ரன்களும், பவுண்டரிக்கான நான்கு ரன்களும் சேர்த்து, ஒரே பந்தில் மொத்தமாக ஒன்பது ரன்கள் கிடைத்தன. எம்.சி.சி விதி 28.3.2-இன்படி இம்முடிவு எடுக்கப்பட்டது. களத்தில் ஃபீல்டிங் அணியால் வைக்கப்பட்டுள்ள ஹெல்மெட்டின் மீது பந்து பட்டால், பேட்டிங் அணிக்கு ஐந்து அபராத ரன்கள் வழங்கப்படும் என்று அந்த விதி கூறுகிறது. பந்து ஹெல்மெட்டைத் தாக்கும் முன் எடுக்கப்படும் ரன்களும் கணக்கில் கொள்ளப்படும்.

இச்சம்பவத்தில், பந்து ஹெல்மெட்டைத் தாக்கியவுடன் அது 'டெட் பால்' ஆகக் கருதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக பவுண்டரி வழங்கப்பட்டு இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஐசிசி விதிப்படி தவறு என்று இந்திய ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் போட்டியில் 50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய U19 அணி விவரம்: கேப்டன் ஆயுஷ் மகாத்ரேவுடன், ஆரன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, விக்கெட் கீப்பர் அபிகியான் குண்டு, வேதாந்த் திரிவேதி, ஆர்.எஸ். அம்ப்ரீஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், ஹெனில் படேல் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் களமிறங்கினர்.

ஆப்கானிஸ்தான் U19 அணி விவரம்: கேப்டன் மஹ்பூப் கான், உஸ்மான் சதத், காலித் அகமத்சாய், ஃபைசல் ஷினோஜாதா, உசைருல்லா நியாயாசி, அஜிசுல்லா மியாகில், காதிர் ஸ்டானிக்சாய், அப்துல் அஜிஸ், ருஹுல்லா அரப், நூரிஸ்தானி உமர்சாய் மற்றும் வாஹீதுல்லா ஜாதாரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Story first published: Wednesday, February 4, 2026, 19:27 [IST]
Other articles published on Feb 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+