
தலையில் பட்ட பந்து
இந்த நிலையில், இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழந்து விளையாடி கொண்டிருந்த போது நிஷந்த் சிந்து, சுழற்பந்துவீச வந்தார். அப்போது, இங்கிலாந்து வீரர் அடிக்க முயன்ற போது, அது நேராக விக்கெட் கீப்பர் தினேஷ் பானா தலையில் பட்டது.

போட்டியை நிறுத்திய நடுவர்
எனினும் தினேஷ் பானா, தலையில் பந்து பட்டதையும் உணராமல், நேடுவரிடம் அவுட் கேட்டார். ஆனால், நடுவர் உடனடியாக போட்டியை நிறுத்தினார். இந்திய அணியின் மருத்துவரை உடமனடியாக களத்துக்கு நடுவர் அழைத்தார். இதனால் போட்டியில் சலசலப்பு ஏற்பட்டது.

ஐ.சி.சி.யின் புதிய விதி
ஒரு வீரரின் தலையிலோ, ஹெல்மேட்டிலோ பந்து பட்டால், உடனே ஆட்டம் நிறுத்தப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் சோதனை செய்ய வேண்டும் என்பது ஐ.சி.சி.யின் புதிய விதி. மருத்துவர் வீரரிடம் உங்கள் பெயர் என்ன, எந்த ஹோட்டலில் தங்கி இருக்கீங்க போன்ற கேள்வியை கேட்பார். அதற்கு காயப்பட்ட வீரர்கள் சரியான பதிலை அளிக்க வேண்டும்.

ஒன்றும் இல்லை
அப்படி அந்த வீரர் சரியான பதிலை கூறவில்லை என்றால் , அவர் உடனடியாக ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, மாற்று வீரர் களமிறக்கப்படுவார். ஆனால் தினேஷ் பானா, தமக்கு ஒன்றும் இல்லை , நன்றாக இருக்கிறேன் என்று கூறி, அணி மருத்துவர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கூற, ஆட்டம் மீண்டும் தொடங்கியது.


Click it and Unblock the Notifications











