Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி U19 உலககோப்பை 2026: எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்.. இந்தியா யாருடன் மோதுகிறது

துபாய்: ஐசிசி ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை 2026 தொடர் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளன. ஐந்து மைதானங்களில் மொத்தம் 41 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த உலகக் கோப்பை போட்டிகள் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரேயில் உள்ள தகஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், விண்ட்ஹோக்கில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானம், மற்றும் ஹை பெர்ஃபார்மன்ஸ் ஓவல் ஆகிய ஐந்து இடங்களில் நடைபெறவுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, ஆசியக் கோப்பை சாம்பியன் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துடன் ஆஸ்திரேலியாவும் பார்க்கப்படுகிறது.

லீக் சுற்றில் போட்டி சூடுபிடிக்கும் வகையில் 16 அணிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும், குரூப் சி பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளும் இடம்பெற்று மோதவுள்ளன.

இறுதியாக குரூப் டி பிரிவில் வலுவான தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் மற்றும் தான்சானியா ஆகிய அணிகள் ஒன்றோடொன்று மோத உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் அணிகளின் பலம் சமமான அளவில் உள்ளதால், போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி வடிவத்தின்படி, ஒவ்வொரு குரூப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குத் தகுதி பெறும். இந்தச் சுற்றில், குரூப் ஏ-விலிருந்து தகுதி பெறும் அணிகள் குரூப் டி-யிலிருந்து தகுதி பெறும் அணிகளுடனும், குரூப் பி-விலிருந்து வரும் அணிகள் குரூப் சி-யிலிருந்து வரும் அணிகளுடனும் இணையும்.

சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஒவ்வொரு அணியும் எதிரெதிர் குழுவிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகளுடன் விளையாடும். உதாரணமாக, குரூப் ஏ-யில் முதலிடம் பிடித்த அணி குரூப் டி-யில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த அணிகளுடன் மோதும். ஆரம்ப கட்டப் போட்டிகளின் புள்ளிகளும் இந்தச் சுற்றில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒவ்வொரு சூப்பர் சிக்ஸ் பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி, இறுதிப் போட்டிக்குள் நுழைய பலப்பரீட்சை நடத்தும். இந்த தனித்துவமான போட்டி வடிவம், வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு, ரசிகர்களுக்கு அதிக சுவாரசியத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை 2026 போட்டிகளை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு காணலாம். ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த போட்டிகளை நேரலையில் காணலாம்.

Story first published: Tuesday, January 13, 2026, 18:17 [IST]
Other articles published on Jan 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+