இனி அதிக தண்டனை.. விதிகளை கடுமையாக்கிய ஐசிசி.. எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க!
துபாய் : ஐசிசி புதிய நடத்தை விதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டக் வொர்த் லீவிஸ் முறையையும் அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடை பெற உள்ளதால், விளையாடும் சூழ்நிலைகளில் பெரிய மாற்றங்கள் எதையும் ஐசிசி மேற்கொள்ளவில்லை.
இந்த புதிய விதிகள் செப்டெம்பர் 30 தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமலுக்கு வரும்.

டிஎல்எஸ் முறை மாற்றம்
2014இல் அறிமுகமான டக் வொர்த் லீவிஸ் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளின் தரவுகளை வைத்து இந்த முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 700 ஒருநாள் போட்டிகள், 428 டி20 போட்டிகளின் தரவுகளை கொண்டு, சுமார் 2,40,000 முடிவுகளை கணக்கில் கொண்டு இந்த முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

பந்து சேதத்திற்கு அதிக தண்டனை
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரின் பந்து சேத விவகாரத்தை அடுத்து ஏற்கனவே, அதன் தண்டனை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மூன்றாம் நிலை குற்றமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், தண்டனையும் உயரும்.

புதிய குற்றங்கள்
பந்து சேதம் தவிர்த்து போட்டியில் தவறான முறையில் ஆதாயம் மற்றும் அனுகூலம் பெறுவது, தனிப்பட்ட நபரை தாக்கிப் பேசுதல், மைக்கில் கேட்கும் படி மோசமான வார்த்தைகளில் பேசுதல், நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்றவை குற்றங்களாக இனி கருதப்படும்.

இனி அதிக தண்டனை
அது போல முன்பு, மூன்றாம் நிலை குற்றத்திற்கு 8 தடைப் புள்ளிகள் இருந்தது. அது இப்போது 12 தடைப் புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாம் நிலை குற்றம் செய்தால் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications