Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறதா சாம்பியன்ஷிப் போட்டி? என்ன சொல்கிறது ஐசிசி?

வெலிங்டன்: நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் அடுத்த வாரம் ஐசிசி கூட்டம் நடைபெற உள்ளது. புதிய விதிகள், போட்டிகள் என பல விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அதே போல் இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி நடத்துவதை பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது. அது குறித்து இறுதி முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும்.

பல நாட்களாக தீர்வு எடுக்கப்படாமல் இருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி குறித்து இந்த வார இறுதியில் முடிவு தெரிந்துவிடும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை

டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை

ஒருகாலத்தில் வாரக்கணக்காக டிவி முன்பு உடகார்ந்து டெஸ்ட் போட்டிகள் பார்த்த நிலை இருந்திருக்கிறது. கிரிக்கெட்டின் பொன்னான காலம் என்றழைக்கப்பட்ட அந்தச் சமயத்தில் டிரா ஆகும் போட்டியை கூட விழுந்து விழுந்து பார்க்கும் நபர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் டி-டுவென்டி போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் போட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்தியாவில் ஐபிஎல் வந்த பின் டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் கேட்பதுடன் ரசிகர்கள் நிறுத்திக் கொண்டனர்.

 வார இறுதியில் முடிவு

வார இறுதியில் முடிவு

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளை மறுபடியும் பிரபலப்படுத்தும் நோக்கில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. பல காலமாக வெறும் கனவாகவே இருந்த இந்தத் திட்டம் தற்போது செயல் வடிவம் பெற இருக்கிறது. அதன்படி இந்த வார இறுதியில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

 டெஸ்ட் போட்டிகள் 2019ல் இருந்து

டெஸ்ட் போட்டிகள் 2019ல் இருந்து

இந்த வார இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நிறைய கருத்துக்கள் எழுந்துள்ளன. அதன் படி சர்வதேச முதல் டெஸ்ட் சம்பியன் ஷிப் போட்டிகள் 2019 ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 9 அணிகள் விளையாடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 இரண்டு வருட இடைவெளியில்

இரண்டு வருட இடைவெளியில்

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போல 4 வருடத்துக்கு ஒரு முறை இல்லாமல் 2 வருடத்துக்கு ஒருமுறை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் உலகின் தலைச்சிறந்த அணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது .

 புதிய மாற்றங்கள்

புதிய மாற்றங்கள்

அதேபோல் டெஸ்ட் போட்டியில் சில வித்தியாசமான மாற்றங்களும் கொண்டுவரப்பட இருக்கின்றது. சம்யங்களில் டெஸ்ட் போட்டிகள் ஒருநாள் போட்டிகள் போல இரவு பகலாக நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாகவும் குறைக்கலாம் என யோசனை வழங்கப்பட்டுள்ளது .

Story first published: Tuesday, October 10, 2017, 6:02 [IST]
Other articles published on Oct 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+