சூயிங்கம் எச்சிலை வைத்து பந்தை பளிச்சிட வைத்த கோஹ்லி.. விசாரணையிலிருந்து தப்பினார்!
துபாய்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது வாயிலிருந்து சூயிங்கம் எச்சிலை எடுத்து பந்தை பளிச்சிட வைத்த இந்திய கேப்டன் விராத் கோஹ்லி மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்து விட்டது.
மின்ட் மிட்டாயை மென்றபடி அந்த எச்சிலை வைத்து கோஹ்லி பந்தைத் துடைத்து அதை மெருகேற்றினார் என்பதுதான் குற்றச்சாட்டாகும். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தப் போட்டி நடந்து 9 நாட்களாகி விட்டது. இப்போது போய் இதை விசாரிக்க முடியாது என்று ஐசிசி கூறி விட்டது இதனால் தர்மசங்கடத்திலிருந்து கோஹ்லி தப்பியுள்ளார்.

ராஜ்கோட் டெஸ்ட்
ராஜ்கோட்டில் இங்கிலாந்துடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போதுதான் விராத் கோஹ்லி இவ்வாறு செய்துள்ளார். கிட்டத்தட்ட தென் ஆப்பிரிக்க கேப்டன் பாப் டூபிளஸிஸ் செய்தது போன்ற செயலைத்தான் கோஹ்லியும் செய்துள்ளார்.

சிக்கிய டூபிளஸிஸ்
இருப்பினும் கோஹ்லி மீதான குற்றச்சாட்டை ஐசிசி நிராகரித்து விட்டது. அதேசமயம் டூ பிளஸிஸிற்கு 100 சதவீத போட்டிக் கட்டணத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது நினைவிருக்கலாம்.

விதிமுறை என்னவென்றால்..
ஐசிசியின் விதிமுறைப்படி பந்தை பளிச்சிட வைக்க அல்லது ஷைன் ஆக்க வெளிப் பொருள் எதையும் பயன்படுத்தக் கூடாது. சட்டையில் தேய்த்தோ அல்லது பேன்ட்டில் தேய்த்தோ மட்டுமே பளிச்சிட வைக்கலாம். அதை மீறி டூபிளஸிஸ் சூயிங்கம்மை மென்று அதன் எச்சிலை எடுத்துத் தடவி பந்தை பளிச்சிட வைத்தார். அதுதான் பிரச்சினையாகி விட்டது.

வாய்க்குள் விரலை விட்டு
கோஹ்லியும் கூட அதேபோலத்தான் செய்துள்ளார். அவர் மின்ட் மிட்டாயை வாய்க்குள் வைத்துக் கொண்டு அதை விரலால் தடவி பின்னர் எச்சிலை எடுத்து பந்தில் தடவு தேய்த்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வந்துள்ளன.

தர்மசேனாவுக்குத் தப்பா தெரியலை
இருப்பினும் இதுதொடர்பாக போட்டி நடுவர்களான தர்மசேனாவும், கிறிஸ் காப்னியும் எந்தப் புகாரும் தரவில்லை. இதை குற்றமாகவும் அவர்கள் கருதவில்லை. இதை மேற்கோள் காட்டியே தற்போது ஐசிசியும் கோஹ்லியை விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications